மகனுக்கு பதவி! வாரிசு அரசியல்! மதிமுகவில் குழப்பமா? வைகோ சொன்ன பதில்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதிமுகவில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

Mdmk general secretary Vaiko says, There is no confusion in Party

துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் மதிமுகவில் சர்ச்சை வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

மேலும், துரை வைகோவுக்கு தலைமைக் கழகச் செயலாளர் பதவி தரப்பட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். துரை வைகோவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதாக கூறப்படுவது அப்பட்டமான பொய் என வைகோ தெரிவித்திருக்கிறார்.

மேலும், பொதுச்செயலாளர் என்ற முறையில் தனது மகனுக்கு நியமனம் மூலமே பதவி வழங்கியிருக்க முடியும் என்றும் ஆனால் அது போன்று செய்யாமல் முறைப்படி ரகசிய வாக்கெடுப்பு நடத்தியே பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் துரை வைகோ அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பமில்லை என்றாலும் கட்சி நிர்வாகிகளின் நிர்பந்தம் காரணமாக இந்த முடிவை தாம் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார் வைகோ.

தனது மகன் துரை வைகோவை பொறுத்தவரை, மேடைகளிலும், பேட்டிகளிலும் நன்றாக பேசுவதாகவும், அவரது பேச்சுக்களை கவனித்த காவல்துறை முன்னாள் உயரதிகாரி ஒருவர் சிறந்த தலைவர் உருவாகி வருவதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். அரசியலில் மாட்டிக்கொண்டால் நிம்மதி இருக்காது என பலமுறை மகன் துரையிடம் தான் அட்வைஸ் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டதால் மதிமுகவிலிருந்து ஒரு சிலர் வெளியேறி இருப்பதாகவும் அது கட்சிக்கு நல்லதாக அமையும் எனவும் கூறினார். மதிமுகவை பொறுத்தவரை திடமாக எந்த குழப்பமும் இல்லாமல் இருப்பதாக வைகோ தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இல்லங்களில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து பேசிய வைகோ, தவறு யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அந்த வகையில் தவறு நடந்ததால் சோதனைகள் நடப்பதாக தெரிவித்தார்.

Recommended Video

    அரசியலில் சவால் நிறைந்த பயணம் காத்து கொண்டிருக்கிறது... துரை வைகோ பேச்சு!

    இதனிடையே வைகோவின் வயது முதிர்வு காரணமாக இனி துரை வைகோ அவரது இடத்தில் நின்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வார் எனத் தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+