மதுரை அவனியாபுரத்தில் எம்ஜிஆர் சிலை சேதம்.. கொந்தளித்த அதிமுகவினர்.. உடனே நடந்த மாற்றம்
மதுரை: மதுரை அவனியாபுரம் வாடிவாசல் அருகே அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை யாரோ மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இன்று காலையில் எம்ஜிஆர் சிலை கீழே விழுந்து கிடப்பதை பார்த்த அதிமுகவினர் இது தொடர்பாக அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எம்ஜிஆர் சிலை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் கிராமத்தில் உள்ள ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமையும் பகுதியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டு இருந்தது. சுமார் 3 அடி அளவில் இந்த சிலை சிறை அறை ஒன்று அமைக்கப்பட்டு அதன் உள் இருக்குமாறு அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் சிலர் அதில் இருந்த எம்ஜிஆர் சிலையை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. காலையில் பார்க்கும் போது எம்ஜிஆர் சிலை வெளியே தலைகீழாக விழுந்து கிடந்தது. உடனடியாக இதுபற்றி அதிமுகவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்து பார்வையிட்ட அதிமுகவினர் இது பற்றி அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புதிய சிலை நிறுவப்பட்டது
மேலும் யார் இந்த செயலில் ஈடுபட்டனர் என்று விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அங்கு விரைந்து வந்தார்.
இதையடுத்து அவர் போலீசாரிடம் விரைந்து இதில் தொடர்புடையவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதன் பிறகு அதே உயரத்தில் எம்ஜிஆர் சிலையானது அந்த இடத்தில் வைக்கப்பட்டது. எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் தான் இந்த இழிவான செயலை செய்ததாக கருதுகிறேன் என்று கூறியிருந்தார். அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மதுரை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி, வாடிவாசல் அருகே அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டனத்திற்குரியது. புரட்சித் தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.
சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.
இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
-
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications