அன்பில்மகேஷ் அதிரடி ஆக்ஷன்.. புதியகல்வி கொள்கையை நுழைக்க முயற்சி? தூக்கி அடிக்கப்பட்ட இணை இயக்குனர்
தேசிய கல்வி கொள்கை திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்கிறார் அன்பில் மகேஷ்
மதுரை: தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம் என்றும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி காலை முதல் மாலை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் என்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் "இல்லம் தேடி கல்வி" என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 2 நாளைக்கு முன்பு தொடங்கி வைத்தார்...
இந்த திட்டம் கொண்டு வரப்பட முக்கிய காரணம், கொரோனா பரவல் சார்ந்த பொதுமுடக்க காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விளக்கம்
ஆனாலும் இந்த திட்டம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன... மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமாகத்தான் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினே ஒரு விளக்கம் தந்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அன்பில் மகேஷ்
அதேபோல, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் ஒரு விளக்கம் தந்திருந்தார்.. அதில், சித்தாந்த ரீதியாக கொள்கை கொண்ட தன்னார்வலர்களை இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அனுமதிக்கமாட்டோம், பதிவு செய்யும் தன்னார்வலர்களின் பின்புலம் முழுமையாக ஆராய்ந்த பிறகே திட்டத்தில் அனுமதிப்போம். அதனையும் மீறி யாரேனும் பதிவு செய்தால் அவர்கள் திட்டத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேசிய கல்வி கொள்கை
எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட மாட்டாது" என்று தெளிவுபடுத்தியிருந்தார். இந்நிலையில், தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் அறிவித்துள்ளார்.. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதுகுறித்து கூறியதாவது:
Recommended Video

அனுமதி இல்லை
"புதிய கல்விகொள்கை திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆசிரியர்களின் விவரங்களை கோரி மத்திய அரசு அனுப்பியுள்ள மின்னஞ்சலுக்கு பதில் அளித்ததோடு ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் அமுதவல்லியை பணியிடமாற்றம் செய்துள்ளதோடு, சுற்றறிக்கையை திரும்ப பெற்றுள்ளோம். தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம்.

இணை இயக்குனர்
இணை இயக்குனரின் செயல் எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது இனிமேல் எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் ஆலோசிக்காமல் பதில் அளிக்ககூடாது என்பதை கல்வித்துறை அதிகாரிகளுக்கு கூறியுள்ளோம்.. இணை இயக்குனர் யாரையும் ஆலோசிக்காமல் சுற்றறிக்கை அனுப்பியது வருத்ததற்குரியது. இது தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம்.. இல்லம் தேடி கல்வித்திட்டத்திம் குறித்து உரிய விளக்கமளித்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி காலை முதல் மாலை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும்..

வகுப்புகள்
மாணவர்களை பள்ளிகளுக்கு கட்டாயமாக வர வேண்டும் தனியார் பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது. உரிய பாதுகாப்புடன் மாணவர்களை வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் சேவையாற்ற பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும், இதுவரை 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications