கொரோனா XE ஆபத்தானதா? தமிழகத்தில் பாதிப்பில்லை.. பீதி வேண்டாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை : தற்போது புதிதாக பரவிவரும் கொரோனா XE வைரஸ் தொற்று பற்றி மக்கள் பீதி அடைய தேவையில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கொரோனா டெல்டா, ஆஃல்பா, ஓமிக்ரான் வரிசையில் ஓமிக்ரான் வகை கொரோனாவை விட 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய கொரோனா எக்ஸ் இ எனப்படும் புதிய மாறுபாடு தற்போது கண்டறியப்பட்டு உலக மக்களை பீதி ஆக்கியுள்ளது.

இவ்வகை புதிய வைரஸ் ஓமிக்ரானின் பிஏ1 மற்றும் பிஏ2 ஆகிய இரண்டு திரிபுகளின் கலவையான பிரிட்டனில் பரவிவரும் இந்த புதிய வகை கொரோனா, இந்தியாவிலும் முதன் முறையாக மும்பையில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.

கொரோனா XE வைரஸ்

கொரோனா XE வைரஸ்

ஆனால் கொரோனா XE பாதிப்பு இல்லை என மத்திய அரசு கூறினாலும், இன்று ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் மக்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது. ஆனால் இவ்வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டாலும், உயிருக்கு ஆபத்தானது இல்லை என இந்தியாவை நுண்ணுயிரியல் துறை மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்


இந்நிலையில் தற்போது புதிதாக பரவிவரும் XE கொரோனா வைரஸ் தொற்று பற்றி மக்கள் பீதி அடைய தேவையில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அமைச்சர் பேட்டி

அமைச்சர் பேட்டி


தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் திருமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அணீஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பீதி தேவையில்லை

பீதி தேவையில்லை

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்," புதிதாக பரவிவரும் XE கொரோனா வைரஸ் தொற்று பற்றி மக்கள் பீதி அடைய தேவையில்லை., மத்திய அரசு கொரோனோ வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றம் தமிழகத்தில் அந்த புதிய வைரஸ் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+