உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி! முதல்வர் முடிவு செய்வார்! நழுவிய அமைச்சர் மூர்த்தி!
உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்விக்கு நழுவிய அமைச்சர் மூர்த்தி.
மதுரை: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்வார் எனக் கூறி நழுவிக் கொண்டார் அமைச்சர் மூர்த்தி.
உதயநிதி ஸ்டாலினின் திறமைக்கும், செயல்பாட்டுக்கும் ஏற்றார் போல் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு உரிய பொறுப்புகளை வழங்குவார் எனவும் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்றோ , துணை முதல்வர் ஆவார் என்றோ கூறாமல் முதல்வர் பார்த்துக் கொள்வார் எனக் கூறி சிக்கலான கேள்வியிலிருந்து அமைச்சர் மூர்த்தி எஸ்கேப் ஆனார்.

உதயநிதி ஸ்டாலின்
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அரியலூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அமைச்சர் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவார் என்றும் அடுத்த முறை அரியலூருக்கு வரும் போது துணை முதலமைச்சராக தான் வருவார் எனவும் கூறியிருந்தார். இவரது இந்தப் பேச்சு திமுக இளைஞரணி நிர்வாகிகளை உற்சாகம் கொள்ள வைத்ததோடு குஷிப்படுத்தியது. இதனிடையே அமைச்சர் சிவசங்கர் இப்படி கூறியிருக்கிறாரே, அந்தக் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என அமைச்சர் மூர்த்தியிடம் மதுரையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அமைச்சர் மூர்த்தி
அதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்றோ , துணை முதல்வர் ஆவார் என்றோ கூறாமல் முதல்வர் பார்த்துக் கொள்வார் என ஒரே வரியில் சிம்பிளாக பதிலளித்து நழுவிக்கொண்டார். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்றும் உதயநிதி ஸ்டாலினின் திறமைக்கும், செயல்பாட்டுக்கும் ஏற்றார் போல் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு உரிய பொறுப்புகளை வழங்குவார் எனவும் தெரிவித்தார்.

ஆரவாரம் வேண்டாம்
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண்டும் என பேசி அவரை தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க வைக்க வேண்டாம் என்பதாலேயே அமைச்சர் மூர்த்தி இவ்வாறு பதிலளித்ததாக தெரிகிறது. இதனிடையே மதுரையில் ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்படக் கண்காட்சியை நடத்துவதில் தீவிரமாக உள்ள அமைச்சர் முர்த்தி அதற்கான பணிகளை கவனித்து வருகிறார்.

நாளை முதல்
நாளை முதல் அடுத்த ஒரு வார காலத்துக்கு ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்படக் கண்காட்சி மதுரையில் நடைபெறவுள்ளது. இதை பள்ளி மாணவர்கள், மதுரையின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பார்வையிடவுள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications