சீனுக்கு வந்த பிடிஆர்.. “என்ன இவ்ளோ ஒல்லியா இருக்க?” அன்போடு விசாரித்த அமைச்சர்.. மேயருக்கு அட்வைஸ்!
மதுரை: கடந்த சில நாட்களாக மதுரையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் எதிலும் பங்கேற்காத அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நேற்று காலை உணவு திட்ட விரிவாக்கத்தையொட்டி பள்ளி மாணவர்களுடன் உணவருந்தினார். அப்போது மதுரை மாநகராட்சி மேயருக்கு ஒரு முக்கியமான அட்வைஸை கூறியுள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் நேற்று மாநிலம் முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி மதுரை முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உணவருந்தினார்.

அப்போது அருகே அமர்ந்திருந்த குழந்தைகளிடம் சாப்பாடு எப்படி இருக்கிறது எனக் கேட்டு விசாரித்தார். வீட்டில் என்ன சாப்பிடுவீர்கள் என்றெல்லாம் கேட்டறிந்தார். காலை உணவை தவிர்க்காமல் தினமும் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்களை அழைத்து, வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்தீர்களா என ஒவ்வொருவராக விசாரித்தார் அமைச்சர் பிடிஆர்.
ஒருசில மாணவர்கள் சாப்பிடாமல் வந்திருந்தனர். சாப்பாடு மிச்சம் இருக்கும் எனக் கூறி அந்த மாணவர்களுக்கும் சாப்பாடு கொடுக்கச் சொல்லி, அவர்களை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார் அமைச்சர் பிடிஆர். ஒரு மாணவன் மிகவும் ஒல்லியாக இருப்பதைப் பார்த்து, அவனிடம் விசாரித்து, பள்ளியில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.

அதோடு, ஒரே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையும், 6 முதல் மேல் வகுப்புகளும் செயல்படும்போது 5ஆம் வகுப்பு மாணவர்கள் வரை மட்டும் காலை உணவு போடுவது சரியல்ல. 1-5ஆம் வகுப்புக்கு காலை உணவு போடும் பள்ளிகளில் மேல் வகுப்பு மாணவர்கள் எவ்வளவு பேர் சாப்பிடாமல் வருகிறார்கள் எனக் கணக்கெடுங்கள்.
மாநகராட்சியில் தீர்மானம் போட்டு சமூக ஆர்வலர்கள் மூலம் நிதி வசூல் செய்யுங்கள். நான் இந்தப் பள்ளிக்கு ஸ்பான்சர் செய்கிறேன். இதே விலையில் இதே அளவில், சாப்பிடாமல் வரும் மேல் வகுப்பு மாணவர்களுக்கும் சாப்பாடு போடுங்கள், ஊட்டச்சத்தோடு மாணவர்கள் வளர வேண்டும், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்துக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "கல்வியும் சுகாதாரமும் இரண்டு கண்கள் என்று முதல்வர் சொல்வதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சின்ன குழந்தைகளுக்கு காலை உணவு கிடைக்கா விட்டால் வளர்ச்சி பாதிக்கப்படும். இதற்கான முன்னுதாரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ல் எனது தொகுதியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தோம், முன்மாதிரி திட்டமாக அது அமைந்தது. இன்று பத்தாயிரம் பள்ளிகளில் துவங்கியுள்ளோம்.
ஒரு மாணவருக்கு 12 ரூபாய் 40 பைசாவில் சிறந்த உணவு வழங்கப்படுவது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதைவிட சிறந்த செலவு செய்ய முடியாது. இதனுடைய பலன் 10, 20 வருடத்திற்குப் பிறகு கிடைக்கக்கூடிய விளைவு மிகச் சிறப்பானதாக இருக்கும். சிறந்த கல்வி மற்றும் ஊட்டச்சத்து பெற்ற இளைஞர்கள் தான் பெரிய சொத்து. இந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த அரசாங்கம் பல நன்மை செய்திருந்தாலும். இது ஒரு சிறப்பான திட்டம்." எனத் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக எந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர் பிடிஆர் தலைகாட்டவில்லை. மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற டி.எம்.சவுந்தரராஜன் சிலை திறப்பு விழா, ராமநாதபுரத்தில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர் மாநாடு, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மாநாடு என எந்த நிகழ்ச்சியிலும் பிடிஆர் பங்கேற்கவில்லை. மதுரையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு உண்ணாவிரதத்திலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நேற்று சீனுக்கு வந்த பிடிஆர், மாணவர்களையும், ஆசிரியர்களையும் நெகிழச் செய்துள்ளார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications