RT-PCR மூலம் டெல்டா + வேரியண்டை கண்டறிய இயலாது.. ஆனால்.. அமைச்சர் பிடிஆர்!
மதுரை: டெல்டா ப்ளஸ் கொரோனாவை சாதாரண கொரோனா பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது. பெங்களூருவில் உள்ள பிரத்தியோக ஆய்வக கருவிகளை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளபடும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 200 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை வணிகவரித்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் திறந்து வைத்தனர்.
அப்போது அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தபோது கொரோனா பரவல் மிகுந்து இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையையும் சரி செய்துள்ளோம்.

நிரந்தரம்
மீண்டும் மூன்றாம் அலை வரும் நிலையில் அதன் பற்றாக்குறை நிரந்தரமாக ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் நான்கு இடங்களில் ஆக்சிஜனை உற்பத்தி இயந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு தற்போது இரண்டு செயல்பட்டு வருகிறது.

மதுரை
மேலும் இரண்டு இயந்திரங்கள் செயல்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் மே 26 ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 1166 ஆக இருந்தது. ஆனால் தற்போது ஜூன் 26 ஆம் தேதி 70 பேர் என தொற்று என குறைந்துள்ளது.

கூட்ட நெரிசல்
பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மதுரை மாநகர் பகுதிகளில் பறக்கும் படைகளை அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா ப்ளஸ் கொரோனாவை சாதாரண கொரோனா பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது.
Recommended Video

ஆய்வுக் கூடம்
இதற்காக பிரத்யேகமாக பெங்களூருவில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினால் மட்டுமே வைரஸை கண்டறிய முடியும். தொடர்ந்து பெங்களூரில் உள்ள ஆய்வுக் கருவியை தமிழகத்திற்கு கூடுதலாக பெற முதல்வர் தலைமையில் முயற்சிகள் எடுக்கப்படும்.

பணம்
தனியார் மருத்துவமனையில் கட்டண வசூல் குறித்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை கண்டறிந்து தீர்வு காண முடியும், தனி நபர்கள் அளித்த புகாரின்படி விசாரித்து அவர்களுக்கு மீண்டும் பணத்தை பெற்றுக் கொடுத்தோம் என நிதியமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications