ஸ்டாலின் வேல் குத்தி கூட ஆடுவார்...செல்லூர் ராஜூ கிண்டல்
மதுரை : தேர்தல் வந்தால் ஸ்டாலின் வேல் குத்திக் கொண்டு கூட ஆடுவார் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். நேற்று, ஸ்டாலினுக்கு அம்னீசியா என கூறிய அமைச்சர், இன்று மீண்டும் ஸ்டாலினை தாக்கி பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், தேர்தல் வந்து விட்டதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டும் அல்ல , வேல் குத்தி ஆடக் கூட செய்வார். அம்மனுக்கு தீ கூட மிதிப்பார். தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார்.

பசும் பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை வாங்கி கீழே கொட்டியவர் எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். குங்குமம் கொடுத்தா அழிப்பது , விபூதி கொடுத்தால் தூக்கி எறிவது , இது போன்ற செயலை மக்களும் கடவுளும் ஏற்க மாட்டார்கள். கபட வேடதாரி , அவர் ஒரு நாளும் முதல்வராக முடியாது என்றார்.

கூட்டணியில் உள்ள பிரேமலதா விஜயகாந்த் பேசுயது குறித்து கேட்டதற்கு, அவர்கள் சொந்த கருத்தை கூறுகிறார். கூட்டணியில் உள்ளவர்களை இப்படி பேசுங்கள் என கூற முடியாது.
தை பூசத்திற்கு விடுமுறை அறிவித்துள்ளது, அனைத்து மதத்தினருக்கு தேவையான நலத்திட்டங்கள் செய்து வருவதால் கடவுள் அதிமுக பக்கம் தான் இருப்பார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும். மீண்டும்
அதிமுக ஆட்சியை பிடித்து, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார் என கூறினார்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!












Click it and Unblock the Notifications