சரோஜா தேவி கொண்டை .. 2000 வருசம் முன்பே.. மிரள வைக்கும் 'ஹேர் ஸ்டைல்' தமிழ் பெண்களுக்கு அத்துபடி!
மதுரை : சரோஜா தேவி கொண்டை 'ஹேர் ஸ்டைல்' எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் பெண்களுக்கு அத்துபடியாக இருந்திருக்கிறது. ஏனெனில் கீழடி அகழாய்வில் கிடைத்த ஒரு தமிழ் பெண் சிலையில் கொண்டை காணப்படுகிறது. இந்த புகைப்படத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.
உலகின் மூத்த குடியாம் தமிழ்குடி என்று போற்றுதலுக்கு உரிய அரிய அற்புதமான தகவல்களை கீழடி ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்தி வருகிறது.
கீழடியில் கிடைத்த 2000 ஆண்டுக்கு முந்தைய பொக்கிஷங்கள் காரணமாக, இப்படித்தான் பண்டைய உலகம் இருந்திருக்கும். நாகரீகங்கள் இப்படித்தான் இருந்திருக்கும் என்று வரலாறுகள் திருப்பி எழுதப்படும் நாட்களும் நகர்ந்து கொண்டே வருகின்றன. தமிழர்களி கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், ஒவ்வொன்றையும் பறைசாற்றும் வகையில் ஆவணங்களை அள்ளிக்கொண்டே வருகிறது அகழாய்வு குழு.

கீழடியில் ஆய்வு
கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்.13ம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் ஆய்வாளர்கள் சுரேஷ், ரமேஷ், அஜய், காவ்யா தலைமையில் நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட 4 தளங்களில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருவிகள்
கீழடியில் 7 குழிகளில் மூடியுடன் கூடிய பானை, சுடுமண் பகடை, கல் உழவு கருவி, பானை ஓடுகள், சிறிய பானை, சுடுமண் கிண்ணங்கள், கட்டிட சிதறல்கள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொருட்கள் கிடைத்த குழிகள், ஆழம், அகலம், உயரம், திசை மற்றும் பொருட்களின் எடை, அகலம், உயரம் உள்ளிட்ட அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

பண்டைய தமிழர்கள்
கடந்த ஜூலை 4ம் தேதி கீழடி அருகே கொந்தகையில் ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள்; இதுவரை 10 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. பண்டைய தமிழர்கள் புதைக்கப்படும்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து வைத்து புதைத்துள்ளனர். அதன் பொருட்களும் கிடைத்திருந்தது. ஒரே இடத்தில் வெவ்வேறு மாதிரி பழக்கங்கள் இருந்ததையும் ஆய்வாளர்களால் உணர முடிந்தது.

பண்பாட்டுச் செல்வம்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டிருந்து. தொட்டியின் வெளிப்புறத்தில் 2 இடங்களில் வட்ட வடிவிலான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை பார்த்து நெகிழ்ந்து போன அமைச்சர் தங்கம் தென்னரசு, சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம் கீழடி என்று ட்வீட் போட்டார்.












Click it and Unblock the Notifications