கமிஷன் தான் முக்கியம்.. எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி தேர்தலை தடுக்கிறார்... ஸ்டாலின் பேச்சு
Recommended Video
திருப்பரங்குன்றம்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதை திட்டமிட்டு தடுக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தில் தி.மு.க வேட்பாளர் சரவணனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், டெண்டர்களில் கமிஷனை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுக்கும் நோக்குடன் தேர்தலை தடுக்கிறார் என்றார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சூழல் உள்ளது என்று அதிமுக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும், 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மாநில தேர்தல் ஆணையமே தானாக முன்வந்து தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்தை வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது என தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் நீதிமன்றத்தில் மாறி, மாறி கூறி வருவது கண்டனத்திற்குரியது என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications