ராணுவ வீரருக்கு இறுதி மரியாதை.. ஒன்றாக இணைந்து அஞ்சலி செலுத்திய இந்நாள், முன்னாள் அமைச்சர்கள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள் ஒன்றாய் சேர்ந்து ராணுவ வீரருக்கு இறுதி மரியாதைசெலுத்தினர்.

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருந்த ராணுவ முகாமில் கடந்த 11ம் தேதி அதிகாலையில் பயங்கரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர், மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன்.

 குடும்பத்திற்கு நிதியுதவி

குடும்பத்திற்கு நிதியுதவி

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும்பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உயிரிழந்த லட்சுமணின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் லட்சுமணின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

மதுரை வந்த ராணுவ வீரர் உடல்

மதுரை வந்த ராணுவ வீரர் உடல்

இதனையடுத்து இன்று நண்பகல் அவரது உடல் மதுரைக்கு விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலைய இயக்குநர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் ராணுவ வீரரின் உடல் அவரது சொந்து ஊரான டி.புதுப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

திமுக, அதிமுக மரியாதை

திமுக, அதிமுக மரியாதை

ஜம்மு - காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். திமுக சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் இறுதிவரை நின்று மரியாதை செலுத்தினர். அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ராணுவ வீரரின் உடலுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் தனி அணியாக பிரிந்து செயல்படும் ஓபிஎஸ் ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தினார்.

 கிரிக்கெட் மட்டை

கிரிக்கெட் மட்டை

தொடர்ந்து வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர் என்பதால், அவர் பயன்படுத்திய கிரிக்கெட் பேட், சவப்பெட்டியின் மீது நினைவாக வைக்கப்பட்டது. பின்னர் ராணுவ வீரர்களின் மரியாதையுடன் 21 குண்டுகள் முழுங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+