அந்த வார்த்தைய ஏன் சொன்னீங்கனு அமைச்சர்களே கேட்டாங்க.. மதுரையில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விஷயம்!
மதுரை: "டங்ஸ்டன் வந்தால் முதலமைச்சராக நான் தொடரமாட்டேன் என சொன்னபோது, "ஏன் அந்த வார்த்தையை சொன்னீர்கள்? அது அவசியம் இல்லையே.." என அமைச்சர்கள் சொன்னார்கள். அதற்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா?.." என மதுரை வல்லாளப்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் 2015 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகைக்கு மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த டெண்டர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தாவின் துணைக் குழுமமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக மேலூர் பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் கொண்டுவரப்படாது என உறுதி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். இருப்பினும் டங்ஸ்டன் திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே போராட்டத்தை நிறுத்துவோம் என மக்கள் அறிவித்து, போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில், மேலூர் பகுதி விவசாய சங்கக் பிரதிநிதிகள், பாஜக தலைவர் அண்ணாமலை உடன் டெல்லிக்கு நேரில் சென்று மத்திய கனிமவளத் துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை நேரில் சந்தித்து டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்தானதை அரிட்டாபட்டி சுற்றுவட்டார மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் சென்னைக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, இன்று நன்றி தெரிவிக்கும் விழா நடத்துவதாகவும், அதில் பங்கேற்க வேண்டும் என்றும் முதல்வருக்கு அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வந்தார். அங்கிருந்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அரிட்டாபட்டி அருகே உள்ள அ.வல்லாளப்பட்டியில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
அங்கு மக்கள் மத்தியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "மத்திய பாஜக அரசு டங்ஸ்டன் திட்டத்தை கொண்டுவர முயன்றது. மத்திய அரசு என்னென்ன கொடுமைகள், அக்கிரமங்கள், மக்கள் விரோத செயல்களை செய்கிறது என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். இன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே டெல்லியில் விவசாயிகள் குளிரிலும், வெயிலிலும் 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்தனர். டங்ஸ்டன் திட்டப் போராட்டத்தில் 3 மாதத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இது முக்கியமானது. மத்திய அரசு பணிந்து, திட்டத்தை ரத்து செய்துள்ளது. இதற்கு மக்களான நீங்களும், தமிழக அரசு கொடுத்த கடுமையான எதிர்ப்பும் தான் காரணம். இது மாபெரும் வெற்றி.

டங்ஸ்டன் திட்டத்துக்கு மூல காரணம், மாநில அரசின் அனுமதியில்லாமல் முக்கிய கனிம வளங்களை மத்திய அரசு ஏலம் விடலாம் என நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வந்த சட்டம்தான். இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அதிமுக எதிர்க்கவில்லை. மாநிலங்களவையில் அதிமுக எம்.பி தம்பித்துரை, அந்தச் சட்டத்தை ஆதரித்தும், வரவேற்றும் பேசினார். இதுவே டங்ஸ்டன் திட்டத்துக்கு தொடக்கப் புள்ளி.
இதையடுத்து டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு 2 முறை கடிதம் எழுதினேன். அதை அரசியல் காரணங்களுக்காக சிலர் மறைக்கப் பார்க்கின்றனர். தமிழக அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்தது வந்தது. இதை திட்டமிட்டு மறைக்கப் பார்க்கின்றனர். இந்த எதிர்ப்பை மீறி ஏலம் விட மத்திய அரசு முயன்றது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அரிட்டாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியபோது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி, திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் அனுமதி தரமாட்டார், நிச்சயமாக தமிழக அரசு தடுத்து நிறுத்தும் என உறுதியாகத் தெரிவித்தார்.
மீண்டும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் எழுதினேன். அன்று மாலையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முன்னிலையில் வணிகர் சங்கம், மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்திலும் தமிழக அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் மூர்த்தி விளக்கினார்.
இதையடுத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சிலர் குறுக்குசால் ஓட்ட் நினைத்தார்கள். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இதை அரசியல் பிரச்சனையாக கருதவில்லை. நான் இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது, தமிழக அரசு அனுமதி அளித்தால் தான் திட்டம் வரும். அதையும் மீறி திட்டத்தை கொண்டு வந்தால் நான் முதல்வராக இருக்கமாட்டேன். இது தான் முடிவு என என அழுத்தம் திருத்தமாக கூறினேன்.
திட்டம் நிறைவேறும் சூழல் வந்தால் முதல்வராக இருக்கமாட்டேன் என ஏன் சொன்னீர்கள் என அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்னிடம் கேட்டனர். ஏன் அந்த வார்த்தை சொன்னீர்கள், அதற்கு அவசியமில்லையே என்றார்கள். அதற்கு பதவியை பற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் பிரச்சனை தான் எனக்கு பெரிது என தெளிவாக கூறினேன். சட்டப்பேரவைத் தீர்மானம், மக்களின் போராட்டம் காரணமாக திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த நேரத்தில் சட்டப் பேரவையில் தீர்மானத்தை ஆதரித்த அனைத்துக் கட்சிகளுக்கும் உங்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளபடியே உங்களுக்கு தான் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவிக்க வேண்டும். நான் எங்க, உங்கன்னு பிரிச்சு பேச விரும்பவில்லை. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதுதான் உண்மை. அந்த நன்றிக்கு பாத்திரமாக இருக்கும் நாங்கள் என்றைக்கும் உங்களுக்கு துணை நிற்போம் என உறுதியளிக்கிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்ற போது, இது உங்களின் அரசு, உங்களில் ஒருவனாக இருந்து கடமைகளை நிறைவேற்றுவேன் என தெளிவாக கூறினேன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கூறி பதவியேற்றேன். அவர் வழியில் நின்று ஆட்சி செய்து வருகிறேன். இந்த ஆட்சி எங்களுக்கானது அல்ல. உங்களுக்கானது. உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications