மதுரையில் நடக்கும் அதிகார மோதல்... செல்லூர் ராஜூ vs ஆர்.பி.உதயகுமார்
மதுரை: அதிமுகவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி.உதயகுமாருக்கு இடையே நடக்கும் அதிகார மோதலால் மதுரையில் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
சென்னை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களில் இரண்டு அமைச்சர்கள் உள்ளதால் இங்கெல்லாம் அதிமுகவில் இரண்டு கோஷ்டிகள் உருவாகியுள்ளன.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்பாக மதுரையில் இரண்டு அமைச்சர்களுக்கிடையே பனிப்போர் நடப்பதால் மாவட்ட நிர்வாகம் யார் பக்கம் நிற்பது எனத் தெரியாமல் புலம்புகிறது.

அதிகார மோதல்
மதுரை மாவட்டத்தில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் என இரண்டு அமைச்சர்கள் உள்ளதால் அவர்களுக்கு இடையே நாளுக்கு நாள் பனிப்போர் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு உதாரணமாக, ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ முட்டுக்கட்டை போட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைபயணம்
அதிமுகவின் சாதனைகளை விளக்கும் ஜோதி ஏந்திய தொடர் நடைப்பயண நிகழ்ச்சியை மதுரை மாவட்டத்தில் ஏற்பாடு செய்து நடத்தி முடித்துள்ளார் ஆர்.பி.உதயகுமார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியை மதுரை மேற்கு தொகுதிகுட்பட்ட பகுதியில் நடத்த அமைச்சர் செல்லூர் ராஜூ அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி ரத்து
அமைச்சர் செல்லூர் ராஜூ தனது தொகுதியில் தன்னை மீறி நிகழ்ச்சி நடத்தினால் அது பிரச்சனைக்கு வழி வகுக்கும் எனக் கூறியதாகவும், இதனால் தேவையில்லாத பதற்றம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அமைச்சர் உதயகுமாரிடம் பேசி விழாவை ரத்து செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.

உதயகுமார் கோபம்
இந்நிலையில் இன்று சென்னை வந்துள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்த விவகாரத்தை முதல்வரிடம் கொண்டு சென்றுள்ளார். அவரோ, அதனைக் கேட்டுக்கொண்டு உள்ளாட்சித் தேர்தல் வருவதால் அதற்கு பின்னர் பேசிக்கொள்வோம் என சமாதானப்படுத்தினாராம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications