'எத்தனையோ பேரை மந்திரியாக்கினேன்'.. 'எவனுக்கும் நன்றியில்லை'.. ஆதரவாளர்களிடம் மு.க.அழகிரி ஆதங்கம்..!
மதுரை: எத்தனையோ பேரை தாம் மந்திரியாக்கி உள்ளதாகவும் ஆனால் யாருக்கும் நன்றியில்லை எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரையில் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு பேசிய அவர் உணர்ச்சி பிழம்பாக வெடித்து தன்னால் பயனடைந்து இப்போது அருகில் வராதவர்களை ஒருமையில் சாடினார்.
மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேச்சை யாராவது ஏற்பார்களா என்றும் அவர் வினவினார்.

மு.க.அழகிரி பேச்சு
திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மற்றும் மத்திய அமைச்சராக இருந்தபோது தென்மாவட்டங்களை சேர்ந்த 12 மாவட்டச் செயலாளர்கள், மந்திரிகள் உள்ளிட்டோர் தாம் எங்கு சென்றாலும் வந்து வரவேற்பு கொடுத்து நின்றதாகவும் அவர்கள் எல்லோரும் நடித்திருக்கிறார்கள் என்பது பிறகு தான் தமக்கு தெரிந்ததாகவும் வேதனைத் தெரிவித்தார்.

ஸ்டாலின் தலைமை
அப்பாவுக்கு பிறகு நீதான் எல்லாம் என மு.க.ஸ்டாலினிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே தாம் கூறிவிட்டதாகவும் ஸ்டாலின் தலைமையை ஏற்க தாம் தயார் என்று கூறியும் தன்னை அவமானப்படுத்தியது நியாயமா என கேள்வி எழுப்பினார். பதவியை எந்தக் காலத்திலும் தாம் விரும்பியதில்லை எனவும் நினைத்திருந்தால் எப்போதோ பெரிய பதவிகளை பெற்றிருக்க முடியும் எனத் தெரிவித்தார்.

மனக் குமுறல்
சில நாட்களில் கட்சியில் தன்னை சேர்ப்பதாக கருணாநிதி தன்னிடம் கூறியதாகவும் ஆனால் அதற்குள் நோய்வாய்பட்டு அவர் மரணித்துவிட்டார் என தழுதழுத்தார். கடந்த 7 ஆண்டுகளாக மனதில் பூட்டி வைத்திருந்த குமுறல்களை இன்று கொட்டித் தீர்த்த அழகிரி, தாம் என்ன முடிவெடுத்தாலும் அதை தாங்கும் இதயம் உங்களுக்கு வேண்டும் என கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கலைஞருக்கு நிகரான
இதனிடையே திமுக மாவட்ட, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலைஞரையே மிஞ்சிவிட்டாய் என ஸ்டாலினை நோக்கி துரைமுருகன் பேசியதை குறிப்பிட்ட அழகிரி, துரைமுருகன் பேச்சை யாராவாது ஏற்பார்களா என்றும் அவர் பேச்சை ஒருவரும் ஏற்கத் தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டார். கலைஞருக்கு நிகரான திறமை யாருக்கும் கிடையாது எனத் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications