யார் இருந்தால் அசைக்க முடியாது என்று அழகிரி சொன்னாரோ அந்த ஆதரவாளர் வெட்டிக்கொலை.. மதுரையில் பதற்றம்
Recommended Video

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளர் மதுரை வீரன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வீரன் தன்னுடன் இருந்தால் யாராலும் தன்னை அசைக்க முடியாது என்று சமீபத்தில்தான் பேசியிருந்தார், மு.க.அழகிரி. இப்படியான நெருக்கம் கொண்ட ஆதரவாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அழகிரி ஆதரவாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[இதெல்லாம் பிள்ளைங்களா.. பற்றிக் கொண்டு வருகிறது இந்த வீடியோவை பார்த்தால்!]

தீவிர ஆதரவாளர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைர் மதுரை வீரன். இவர் மு.க. அழகிரி ஆதரவாளராக வலம் வந்தவர். அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகும்கூட, மதுரைவீரன் தொடர்ச்சியாக அவரது ஆதரவாளராகவே இருந்து வந்தார்.

அழகிரி பேச்சு
2 மாதங்களுக்கு அழகிரி தலைமையில் மதுரை வீரன், மகளுக்கு திருமணம் நடைபெற்றது. "மதுரை வீரன் போன்றவர்கள் என்னுடன் இருக்கும்போது, என்னை யாரும் அசைக்க முடியாது" என்று அந்த திருமண விழாவில், அழகிரி பேசியிருந்தார்.

வெட்டிக் கொலை
இந்த நிலையில், இன்று காலை, மதுரை வீரன் அவர் வீட்டின் அருகே, வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன காரணம்
மதுரை வீரன் கொலை செய்யப்பட்டது, அழகிரிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அரசியல் பிரச்சினையால் இந்த கொலை நடந்ததா என்ற கேள்வியும் அழகிரி ஆதரவாளர்கள் இடையே எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications