ஊரில் இருந்தால் தானே வம்பு... மலேசியா போயிடுவோம்... அழகிரி ஆதரவாளர்கள் டூர்
மதுரை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து மு.க.அழகிரி தரப்பிடம் ஆதரவு கோரப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பே சிங்கப்பூர், மலேசியா என பறந்துவிட்டனர்.
ஊரில் இருந்தால் திமுகவுக்கு எதிராக வேலைசெய்தார்கள் என்ற பழிச்சொல் வரும் என்பதால் மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் தலைமையில் ஒரு பட்டாளமே சிங்கப்பூர் சென்றிருக்கிறது.
புத்தாண்டை கொண்டாடியது போலவும் இருக்கும், தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கிக்கொண்டது மாதிரியும் இருக்கும் என்பதற்காக அவர்கள் வெளிநாடு சென்றார்களாம்.

நடவடிக்கை
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரியை கட்சியில் இருந்து விலக்கியது முதல் அவர் ஒரு அரசியல் பார்வையாளராகவே இருந்துவருகிறார். இதுவரை மாற்றுக்கட்சிக்கு செல்வதற்கான எந்தவொரு முன்னெடுப்பையும் அவர் மேற்கொள்ளவில்லை. அவ்வப்போது அவரது தம்பி ஸ்டாலின் மீது மட்டும் விமான நிலைய பேட்டிகளில் சீறுவார்.

சிக்கவில்லை
மு.க.அழகிரியை பாஜகவில் இணைக்க பல முறை தூண்டில் போடப்பட்ட நிலையிலும் அவர் பிடிகொடுக்காமல் கழன்றுகொண்டார். மேலும், உள்ளூர் அமைச்சர் செல்லூர் ராஜூவும் அடிக்கடி அழகிரியின் புகழை பாடி அவருடன் நெருக்கம் பாராட்ட முயற்சித்தார். ஆனால் எதற்கும் சிக்காமல் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை மட்டும் கவனித்து வருகிறார் அவர்.

ஆதரவு
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள அழகிரி ஆதரவாளர்களை வளைக்க பாஜக, அதிமுக திட்டமிட்டு அதற்காக காய் நகர்த்தியது. கட்சியில் இல்லாவிட்டாலும் மறைந்த தனது தந்தைக்காக திமுகவுக்கு எதிராக வேலை செய்ய வேண்டாம் என்பது அழகிரியின் எண்ணமாம். கோபத்தில் பேட்டிகள் கொடுத்தாலும், தந்தையின் புகழுக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அவர்.

சிங்கப்பூர் டூர்
இந்நிலையில் தேர்தல் நேரத்தில் மதுரையில் இருந்தால் வீண் வம்பும், பழிச்சொல்லும் வரும் என்பதால் அழகிரி ஆதரவாளர்களான மன்னன், கோபிநாதன், ராஜூ, உள்ளிட்டோர் சிங்கப்பூர், மலேசியா என டூர் சென்றுவிட்டனர். இதன் மூலம் தாங்கள் யாருக்கும் வேலைசெய்யவில்லை அமைதியாக ஒதுங்கிக்கொண்டோம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். மதுரை மாவட்ட திமுக பொறுப்புக்குழுவில் உள்ள எஸ்.ஆர்.கோபியும் அழகிரி ஆதரவாளர்களுடன் டூர் சென்றிருப்பது தான் குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications