கனமழையால் சரிந்து விழுந்த வாழைமரங்கள்.. நிவாரணத்திற்கு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏற்பாடு
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கனமழையால் மண்ணில் சரிந்த வாழைக்கு உரிய இழப்பீட்டை வழங்க திருப்பரங்குன்றம் எம்எல்ஏ பா சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி கிராமத்தில் 40 ஏக்கர் அளவிலான வாழை தோப்பில் பயிரிடப்பட்டிருந்த 10 லட்சம் மதிப்பிலான 5000-க்கும் மேற்பட்ட தார் ஈன்ற வாழை மரங்கள் மண்ணில் சரிந்தது.

இதனை கிராம விவசாயிகள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் MLA பார்வைக்கு எடுத்து சென்றனர். தகவல் அறிந்த டாக்டர்.சரவணன் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு மதுரை மாவட்ட ஆட்சியாளரை தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டார்.
மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு, கணக்கீட்டின் அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கில் விவசாயிகளும், பொதுமக்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வரும் நிலையில் தற்போது கனமழையில் வாழை மரங்கள் சரிந்ததால் விவசாயிகள் சோர்ந்து போயிருந்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொன்டு உடனடி நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications