மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொஞ்சம் கூட அசரலை.. பதறலை.. ஜாலியாக.. கேஷுவலாக.. தில்லாக.. கெத்து காட்டிய கமல்!

தோப்பூரில் கமல்ஹாசன் எதார்த்தமாக பேசி அனைவரையும் அசர வைத்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    நான் கூறியது சரித்திர உண்மை... சர்ச்சை பேச்சு குறித்து கமல் விளக்கம்

    மதுரை: இதுதான் கமல் ஹாசன்.. கொந்தளித்து குமுறிய பாஜகவினருக்கு தனது அசராத பேச்சாலும், தில்லான பதிலாலும் பதிலடி கொடுத்து விட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

    தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை, வருத்தம் காட்டவில்லை, பாஜகவினரின் வழக்குகள் குறித்து பதட்டம் படவில்லை. மாறாக, நான் பேசியது சரிதான்.. இது வரலாறு.. என்னுடன் மோதாதீர்கள் என்று பட்டவர்த்தனமாக கூறி விட்டார்.

    என்னைப் பேச விடாமல் செய்தால் எனது தொண்டர்கள் பேசுவார்கள்.. அப்படி அவர்கள் பேச ஆரம்பித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்றும் தன்னை முடக்க நினைத்தவர்களுக்கு பதிலடியும் கொடுக்கத் தவறவில்லை கமல்.

    என் கொள்கையுடன் மோதாதீர்கள்.. தோற்றுதான் போவீர்கள்.. கமல் வார்னிங்! என் கொள்கையுடன் மோதாதீர்கள்.. தோற்றுதான் போவீர்கள்.. கமல் வார்னிங்!

    தோப்பூரில் பேச்சு

    தோப்பூரில் பேச்சு

    அரவக்குறிச்சியில் பேசிய அதிரடியான அந்த சர்ச்சை பேச்சுக்குப் பிறகு முதல் முறையாக இன்று மதுரை திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார் கமல். தோப்பூர் பகுதியில் பெரும் திரளாக கூடியிருந்த மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் கமல்ஹாசன் பேசினார்.

    தெளிவான பேச்சு

    தெளிவான பேச்சு

    வழக்கத்தை விட இன்று அதிக காமெடியாக பேசினார். அதிக உற்சாகமாகவும் பேசினார். பேச்சில் அத்தனை சரளம். நிறுத்தி நிதானமாக தனது எதிர்ப்பாளர்களை நொறுக்கி எடுத்தார்.. அதுவும் வலிக்காமல் அடித்தார். கூடியிருந்த கூட்டத்தினரை மட்டுமல்லாமல், கமல் பேச்சை டிவி மூலமாக பார்த்தவர்கள் கூட அவரது பேச்சில் அசந்து போயிருப்பார்கள். அத்தனை தெளிவான பேச்சு.

    விருமாண்டி

    விருமாண்டி

    கமல் தனது பேச்சின் மூலம் சில விஷயங்களை தெளிவுபடுத்தினார். ஒன்று தான் பேசிய பேச்சிலிருந்து அவர் மாறவில்லை, அதை மறுக்கவும் இல்லை. மாறாக நான் பேசியதை முழுமையாக கேளுங்கள். முன்னும் பின்னும் வெட்டி விட்டு நடுவில் மட்டும் பார்க்காதீர்கள். இதற்காக அவர் "விருமாண்டி" படக் காட்சியையும் உவமானமாக கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.

    தோற்று போவீர்கள்

    தோற்று போவீர்கள்

    2வது விஷயம், பாஜகவினரின் வழக்குகளுக்காக தான் பயப்படவில்லை, அசரவில்லை, நடுங்கவில்லை என்பதையும் வெளிப்படுத்தினார். பேச்சில் அத்தனை தெளிவு. அதை விட என் கொள்கை நேர்மையானது. அத்துடன் மோதாதீர்கள். தோற்றுப் போவீர்கள் என்று கமல்ஹாசன் அழகாக சிரித்தபடியே எச்சரிக்கையும் விடுத்தார்.

    நிலைப்பாடு

    நிலைப்பாடு

    3வது விஷயம், எதையும் சந்திக்க தான் தயார் என்பதை கமல்ஹாசன் வெளிப்படுத்தினார். என்னுடன் மோதுவோரை கொள்கை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சந்திக்கத் தயார் என்று அவர் கூறியதன் மூலம் தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தினார்.

    படு நிதானம்

    படு நிதானம்

    4வது விஷயம், தனது பேச்சின்போது ஒருமுறை கூட ஒரு வார்த்தை கூட அநாகரீகத்தையோ, கோபத்தையோ வெளிப்படுத்தவில்லை. மாறாக படு தெளிவாக, நிதானமாக, அழகாக பேசி தனது எதிர்ப்பாளர்களை காலி செய்து விட்டார். பேச்சைக் கேட்டோரை கவர்ந்து விட்டார். தேவையில்லாமல் வார்த்தைகளை கொட்டவில்லை. அளந்து எடுத்தது போல அத்தனை நிதானமான பேச்சை இன்று கமல் வெளிப்படுத்தினார்.

    பெரும் எதிர்பார்ப்பு

    பெரும் எதிர்பார்ப்பு

    மொத்தத்தில் தான் எதற்காகவும் பயப்படவில்லை, நான் பேசியது சரித்திர உண்மை என்று அடித்துக் கூறி விட்டு தோப்பூரை விட்டு நகர்ந்த கமல்ஹாசன் பேச்சுக்கு அவரது எதிர்ப்பாளர்கள் எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார்கள் என்பது பெரும் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

    English summary
    MNM Leader Kamal hasans Thoppur campaign after his controversy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X