உசிலம்பட்டி அருகே சொந்த ஊரில்.. தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்
மதுரை: உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் பண்ணை தோட்டத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Recommended Video
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவரது உடல் மருத்துவமனையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று அதிகாலையில் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி டேவிட் பண்ணைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் தா.பாண்டியன் உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை எம்பியுமான வெங்கடேசன், திமுக சார்பில் தேனி மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன், உசிலம்பட்டி 58 கிராம பாசன விவசாய சங்க நிர்வாகிகள், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலர் மாலை அணிவித்தும், மலர்வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடலுக்கு பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்திய பின் உடலை டேவிட் பண்ணையில் உள்ள தோட்டத்தில் தா.பாண்டியன் உடல் எடுத்துச்செல்லப்பட்டு, சவப்பெட்டியில் உடலை வைத்து கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications