மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

101 வகை உணவுடன் மருமகளுக்கு விருந்து.. அசத்திய மதுரை மாமியார்.. தீயாய் பரவும் வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

மதுரை: 101 வகை உணவுடன் மருமகளுக்கு விருந்து கொடுத்து அசர வைத்த மாமியார் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊரே மெச்சும் மாமியார் என புகழும் அளவுக்கு அவர் பிரபலமடைந்து வருகிறார்.

Recommended Video

    101 வகை உணவுடன் மருமகளுக்கு விருந்து.. அசத்திய மதுரை மாமியார்

    மாமியார்- மருமகள் உறவு என்பது ஒருவரை ஒருவரை தாயாகவும் மகளாகவும் பார்க்கப்படும் உறவு. இது மட்டுமல்ல மாமனார், கொழுந்தன், நாத்தநார் என புதிய உறவுகளை தனது தந்தை, அண்ணன் அல்லது தம்பி, தங்கை அல்லது அக்காள் என நினைத்து அனுசரித்து நடக்க வேண்டும் என்பதே புதுப்பெண் பெரியோர்கள் செய்யும் அட்வைஸ் ஆகும்.

    ஆனால் இன்று மாமியார்- மருமகள் என்றாலே சில வீடுகளில் ஆகாத மருமகள் கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்றாகிவிடுகிறது. அது மாமியாரை தாயாக மட்டும் அல்ல சக பெண்ணாக கூட மதிக்காத சில மருமகள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    மாடு தருவதாக சொல்லி ஆந்திர விவசாயிக்கு டிராக்டரை அனுப்பி வைத்த சோனுசூட்.. இன்ப அதிர்ச்சிமாடு தருவதாக சொல்லி ஆந்திர விவசாயிக்கு டிராக்டரை அனுப்பி வைத்த சோனுசூட்.. இன்ப அதிர்ச்சி

    101 வகை உணவு

    101 வகை உணவு

    ஆனால் மதுரையில் திருமணமாகி தனது வீட்டுக்கு முதல் முதலில் வரும் மருமகளுக்கு 101 வகை உணவுகளை தயார் செய்து ஊரே மெச்சும் அளவுக்கு பேசப்படுகிறார் ஒரு மாமியார். வாங்க யார் அவர் என்பதை பார்ப்போம். மதுரை மாவட்டம் முன்றுமாவடி பகுதியை சேர்ந்த அஹிலா - அபுல்கலாம் தம்பதியனரின் மகன் அபுல்ஹசனுக்கும் ஷப்னாவுக்கும் கடந்த 9-ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

    உறவினர்கள்

    உறவினர்கள்

    இந்த நிலையில் திருமண விருந்திற்காக உறவினர்கள் அழைப்பு விடுத்த நிலையில் ஊரடங்கு காரணமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டிற்கு முதல்முறையாக வந்த மருமகள் ஷப்னாவிற்கு தானே விருந்து அளிக்க நினைத்த மாமியார் அஹிலா, பிரியாணி, பிரைட் ரைஸ், மட்டன், சிக்கன், மீன், முட்டை, காடை, லெமன், புளியோதரை, தயிர் சாதம், ஆம்லெட், புரோட்டா, சப்பாத்தி தொடங்கி அனைத்து வகையான சூப்புகள், பழ ஜூஸ்கள் முதல் அப்பளம் வரை 101 வகையான உணவுகளை தயாரித்து நீண்ட தலை வாழை இலையில் வைத்து விருந்து வழங்கியுள்ளார்.

    மருமகளுக்கு ஊட்டிய மருமகள்

    மருமகளுக்கு ஊட்டிய மருமகள்

    ஒவ்வொன்றின் சுவையையும் பார்த்து பார்த்து செய்த அவர் தனது மருமகளுக்கு தானே ஊட்டிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு ஆந்திர மாநிலத்தில் 67 வகையான உணவுகளை மருமகனுக்கு வழங்கிய மாமியாரின் வீடியோ ட்ரெண்டாகிய நிலையில் மதுரையில் உள்ள ஒரு மாமியார் மருமகளுக்கு வழங்கிய இந்த பிரம்மாண்ட விருந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

    சீரியல்களில்தான் எதிரி

    சீரியல்களில்தான் எதிரி

    மாமியார் மருமகள் என்றால் எதிரிகளாக சீரியல்களில் சித்தரிக்கும் நிலையில் மதுரை மாமியாரின் செயல் மாமியார் மருமகள் உறவிற்கு புதிய இலக்கணத்தை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சம்பவம் ஷப்னாவின் தாய், தந்தையரை எத்தனை நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பர் என்பதை உணர முடிகிறது. இதே போன்ற பாசத்தை ஷப்னாவுக்கு காட்டுவார் என்றே நம்புவோம்.

    English summary
    Mother in law in Madurai prepares 101 food items for her newly married son- daughter in law, the girl who entered into her house for the first time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X