தமிழ் கேள்வித்தாளுடன்.. விரைவில் ரயில்வே பொறியாளர் பதவி உயர்வு மறு தேர்வு! சு.வெங்கடேசன் வரவேற்பு
மதுரை: கடந்த 10ம் தேதி நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலை பொறியாளர் பதவி உயர்வு தேர்வில் தமிழ் மொழியில் கேள்வித்தாள் இல்லாதது விதி மீறல் என்றும், எனவே தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் எனவும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கோரியிருந்தார். இதனையடுத்து தமிழ் வினாத்தாளுடன் மறுத்தேர்வு நடத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது.
அதாவது, "ஆகஸ்ட் 10ம் தேதி நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலை பொறியாளர் பதவி உயர்வு காலியிட தேர்வில் கேள்வித்தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்ட மூன்று மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

இது மொழி உரிமை மீதான தாக்குதல் ஆகும். ஒன்றிய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே. ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டும்" என்று கோரிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) நடத்தும் தேர்வுகளுக்கான, எழுத்துத் தேர்வுக்கான நடைமுறைகளை பொறுத்தவரை, கேள்வித்தாள்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது என 15 பிராந்திய மொழிகளில் வழங்கப்பட வேண்டும்.
மேலும் தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் (negative marking) என்ற விதிமுறை இல்லை. இதனால், எந்தவொரு கேள்விக்கும் தவறான பதிலளித்தால், அதற்கான மதிப்பெண்கள் கழிக்கப்படாது. பல்வேறு மண்டலங்களில் தேர்வுகளுக்குத் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, தேர்வின் செயல்முறைகள் நடைபெறும். எழுத்துத் தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்படும்.
தேர்வின்போது எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தவோ, கொண்டுவரவோ கூடாது. இந்த விதியை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது விதி. ஆனால் ஆக.10ம் தேதி நடந்த தேர்வில் தமிழ் வினாத்தாள் வழங்கப்படவில்லை. எனவேதான் மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் தனது கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதாகவும், ஏற்கெனவே நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மறு தேர்வு தமிழ் வினாத்தாளை உள்ளடக்கி நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்திருப்பதாகவும் சு.வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது x பக்கத்தில்,
"தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி அகற்றப்பட்டது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் தமிழ் மொழியில் கேள்வித்தாள் இல்லாதது விதிமீறல் எனவே தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரியிருந்தேன்.
எனது கோரிக்கை ஏற்கப்பட்டு தேர்வு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் கேள்வித்தாளுடன் விரைவில் மறு தேர்வு நடத்தப்படும். என் கடிதத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த இரயில்வே அமைச்சருக்கு நன்றி" என பதிவிட்டிருக்கிறார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications