பிச்சை எடுத்தால்தான் சோறு.. வீடு வீடாக சென்றால்தான் வெற்றி! காங்கிரஸ் குறித்து எம்பி திருநாவுக்கரசர்
மதுரை: வீடு வீடாக போய் பிச்சை எடுத்தால்தான் சோறு கிடைக்கும். அது போல் வீடு வீடாக காங்கிரஸ் கட்சியினர் பணி செய்தால்தான் வெற்றி கிடைக்கும் என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை மகப்பூப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற மதுரை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

அரசியல் ஆலோசகர்
அப்போது கூட்டத்தில் அவர் பேசுகையில், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிசோரும் கட்சியின் பூத் கமிட்டி வரையில் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதை கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் காங்கிரஸ் கட்சியினை விரட்டுவதில்லை, மக்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு என்றும் உண்டு.

பிச்சை எடுத்தல்
பிச்சை எடுத்தாலும் வீடு வீடாக செல்ல வேண்டும். அப்போது தான் பலன் கிடைக்கும், அதே போல் காங்கிரஸ் கட்சியினரும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து களப்பணி செய்தால் தான் வெற்றி கிடைக்கும். ஆனால் நம்ம கட்சியினர் வேலை செய்வதே இல்லை.

நான் உளறிடுவேன்
இதற்கு மேல் பேசினால் வைத்தெறிச்சலில் நான் உளறிவிடுவேன். ஏதோ பண்றத பண்ணுங்க.. ராகுல்காந்திய பிரதமராக்க பார்ப்போம் என்றார். காங்கிரஸ் கட்சி கடந்த சில காலமாக பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. 2014, 2019 ஆகிய லோக்சபா தேர்தல்களில் படுதோல்வி அடைந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலுக்காக வியூகம் வகுக்க காங்கிரஸ் முடிவு செய்தது.

பிரசாந்த் கிஷோர்
இந்த நிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ கட்சிக்கு தேவை வியூகம் அல்ல, நல்ல தலைமை என சொல்லி காங்கிரஸில் இணைய மறுத்துவிட்டார். பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் இப்படி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் மறு பக்கம் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை அமைக்க மம்தா பானர்ஜி, கேசிஆர் உள்ளிட்டோர் முயன்று வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் இத்தகைய விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications