மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன்யா.. 50 வருஷமா கச்சத்தீவை இழுக்கறீங்க?.. திமுகவை கலாய்க்கும் நாம் தமிழர் காளியம்மாள்

திருப்பரங்குன்றம் வேட்பாளர் ரேவதிக்காக காளியம்மாள் பிரச்சாரம் செய்தார்

Google Oneindia Tamil News

மதுரை: "நீங்க 50 வருஷமாவா கச்சத்தீவை மீட்கறீங்க? புடிச்சி கட்டிப்போட்டு இழுத்துட்டு வந்திருந்தாலே, இன்னேரம் கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும்போல இருக்கு. ஏன்யா.. 50 வருஷமா கச்சத்தீவை இழுக்கறீங்க?" என்று நாம் தமிழர் கட்சி காளியம்மாள் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து விளாச்சேரி பொதுக்கூட்டத்தில் காளியம்மாள் உரையாற்றினார். அப்போது அவர் பேசியபோது: 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு திராவிட கட்சிகள் இன்னும் மல்லுக்கட்டிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு வர்ற சூழலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை தந்ததும், பெண்களின் சக்தி பெரும் சக்தின்னு காமிச்ச ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான்!

33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு திராவிட கட்சிகள் இன்னும் மல்லுக்கட்டிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு வர்ற சூழலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை தந்ததும், பெண்களின் சக்தி பெரும் சக்தின்னு காமிச்ச ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான்!

திருப்பரங்குன்றத்தில் 36 பேர் ஆண் வேட்பாளர்கள். அந்த 36 பேரையும் எதிர்த்து பெண் புலி ரேவதி களமிறங்கி உள்ளார். பெண்களுக்கான பிரதிநிதித்துவமே இல்லாத இடத்திலும்கூட, பெண்களுக்கான வலு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து இந்த களத்தில நாம் தமிழர் கட்சி நிறுத்தி உள்ளது.

 கிருதுமால் நதி

கிருதுமால் நதி

மதுரையில் வைகை ஆறுதான் வளம் கொழிக்கும் ஆறுன்னு நாம நெனச்சிக்கிட்டு இருக்கோம். ஆனால் கிருதுமால் நதின்னு ஒன்னு இருக்கு. அதை நிறைய பேர் மறந்துட்டோம். அதை ஒன்றிரண்டு தொலைக்காட்சியில கூட ஒரு துளி செய்தி போல காட்டி இருப்பாங்க.

1980களில் மோடி இ- மெயில் அனுப்பினார்? டிஜிட்டல் கேமரா வெச்சிருந்தார்?.. ட்விட்டரில் ‘தெறி'சர்ச்சை 1980களில் மோடி இ- மெயில் அனுப்பினார்? டிஜிட்டல் கேமரா வெச்சிருந்தார்?.. ட்விட்டரில் ‘தெறி'சர்ச்சை

 நதியை காணோம்

நதியை காணோம்

நாகமலை-யில் இருந்து அந்த நதி உருவாகுது. மதுரை, சிவகங்கை வழியாக ராமநாதபுரம், வரை சென்றடைகிறது. ஆனா இந்த நதி, ராமநாதபுரம் மக்களை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக கேசரி என்ற மன்னன், பாசனத்துக்காக ஒருவழியை உருவாக்கினார். ஆனால் வடிவேலு சொல்ற மாதிரி அந்த நதியை காணோம். வெறும் ஆக்கிரமிப்புகள்தான். மணலும் கொள்ளைதான். கழுத்து நெறிக்கப்பட்ட கால்வாய் மாதிரி இன்னைக்கு அவ்வளவு பெரிய நதி மாறி போயிருக்கு. இதை பேசுறதுக்கு எந்த அரசியல் கட்சிக்காவது திராணி இருக்கா? இந்த மண்ணோட வளத்தை பத்தியும் கவலை, மகளிர் நலத்தை பற்றியும் கவலை இல்லை.

 சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டத்தை கொண்டுவருவோம், கச்சத்தீவை மீட்டோம் என்று திமுக சொல்லுது. ஆனா எங்க அண்ணன் சீமானை வாய்சொல் வீரர்னு சொல்றீங்களே.. நீங்க 50 வருஷமாவா கச்சத்தீவை மீட்கறீங்க? புடிச்சி கட்டிப்போட்டு இழுத்துட்டு வந்திருந்தாலே, இன்னேரம் கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும்போல இருக்கு. ஏன்யா.. 50 வருஷமா கச்சத்தீவை இழுக்கறீங்க?

காசாக்குது

காசாக்குது

இந்த விளாச்சேரி பகுதியில் பொம்மை செய்யும் தொழிலாளர்கள் இருக்காங்க. அவங்க நலனுக்கு ஏதாவது ஒரு நலத்திட்டம் ஒதுக்கியிருக்காங்களா? ரெண்டு தண்ணியை வெச்சுதான் அரசாங்கம் ஓடுது. குடிக்கிற தண்ணியை வித்து காசாக்குது. மக்களை மழுங்கடிக்கிற சரக்கை வித்து காசாக்குது.

 களப்பிரச்சனை

களப்பிரச்சனை

ஓட்டுக்கு எவ்வளவு காசு, சீட்டுக்கு எவ்வளவு காசுன்னு கேட்டு கட்சி நிறுத்திட்டு இருக்காங்க. ஆனா களப்பிரச்சனையை யாராவது ஆராய்றாங்க? மக்கள் மீதான புரிதல் இவங்களுக்கு இருக்கா? ஓட்டுக்கு 2 ஆயிரம் தர்றது ஏன்? 2 லட்சம் கோடியை சம்பாதிக்கதான்! புல்லுக்கும், பூச்சிக்கும், மண்ணுக்கும், புழுவுக்கும், மரத்துக்கும், வண்டுக்கும், காக்கைக்கும், கடலுக்கும், மலைக்கும் பேசுகிற அரசியல் நாம் தமிழர் கட்சிதான்!

 மாத்திரை வரப்போகுது

மாத்திரை வரப்போகுது

இனிமேலும் விவசாயிகளை சாகடிக்கிற, நீர்வளத்தை கொள்ளையடிக்கிற, கனிம வளத்தை கொள்ளையடிக்கிற நிலைமை வந்துவிட்டால், அமெரிக்காகாரன் உள்ளே வருவான், ரசத்துக்கு ஒரு மாத்திரை, சாம்பாருக்கு ஒரு மாத்திரை, வடகறிக்கு ஒரு மாத்திரைன்னு ஆயிடும். ரசத்துக்கு கூட்டு மாத்திரையை வைப்பதா, சாம்பாருக்கு ரச மாத்திரையை வைப்பதா என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டு விடுவீர்கள். அதனால விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

English summary
Naam Tamilar party Kaaliammal campaigned for Thiruparankundram Candidate Revathi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X