2026 தேர்தலில் 25 சீட் ..நாடார்களுக்கு கல்வி, தொழில்துறை அமைச்சர் பதவி வேண்டும்! அதிரடி கோரிக்கை!
மதுரை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு என தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சிகள் போட்டியிடும் 234 தொகுதிகளில் 25 தொகுதிகளில் நாடார்களை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என மதுரையில் கரிக்கோல்ராஜ் பேட்டி
மதுரையில் நாடார் மஹாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பிய யூடியூப் சேனல் நெறியாளர் முக்தார் அகமது மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

சங்கத்தின் சார்பில் முக்தார் அகமதுக்கு எதிரான வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆகவே, காலம் தாழ்த்தாமல் முக்தார் அகமதுவை காவல்துறை கைது செய்ய வேண்டும். மதுரையில் 22 ஆம் தேதி சேர்மத்தாய் வாசம் கல்லூரியில் தமிழகத்தில் உள்ள 2,500 நாடார் உறவின்முறையினை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு விவாதிக்க உள்ளோம்.
நாடார்கள் அரசியல் உரிமை மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானமாக நிறைவேற்ற உள்ளோம். எங்களது கோரிக்கைகளை ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளை சந்தித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெற வலியுறுத்த உள்ளோம்.
மேலும், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் போட்டியிடும் 234 தொகுதிகளில் 25 தொகுதிகளில் நாடார்களை வேட்பாளராக நிறுத்த வேண்டும். கல்வி, தொழிலை முதன்மையாக செய்யும் நாடார்களுக்கு முக்கியத்துவம் செய்யும் விதமாக நாடார் சமூகத்தை சார்ந்த கல்வி, தொழில்துறை அமைச்சர் பதவி வழங்க வேண்டும். வள்ளியூர் அருகே நடைபெற்ற இரட்டை கொலை சமுதாய ரீதியாக நடைபெறவில்லை.
சமுதாய கொலை என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. கொலையானவர்கள், காயமடைந்தோர் அனைத்து சமூகத்திலும் உள்ளனர். கஞ்சா, மதுவினால் கொலைகள் நடைபெறுகிறது, போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என கூறினார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications