உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி... மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக ச.நாகராஜன் பொறுப்பேற்றார்
மதுரை: மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக ச.நாகராஜன் பொறுப்பேற்றார். பொது சுகாதாரம் மற்றும் நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தவர்.
சில தினங்களுக்கு முன்பு, மதுரை வாக்குப் பதிவு மையத்திற்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த சம்பவம் அறிந்த திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, வட்டாட்சியர் சம்பூரணம் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரும் ,தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரிகளையும் மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய நடைமுறைகளில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
வட்டாட்சியர் சம்பூர்ணத்தை மையத்திற்குள் செல்ல அனுமதித்த, உதவி போலீஸ் ஆணையர், ஆட்சியரின் தனி அதிகாரி, பணியில் இருந்த காவல் அதிகாரிகள் மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக ச.நாகராஜன் பொறுப்பேற்றுள்ளார். பொது சுகாதாரம் மற்றும் நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தவர்.
-
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications