களமிறங்கிய நயினார் நாகேந்திரன்.. மதுரையில் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய பாஜக தலைவர்கள்!
மதுரை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற முழக்கத்துடன் மதுரையில் தேர்தல் சுற்றுப்பயணத்தை பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தொடங்கினார். இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எச் ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். இந்த தேர்தலில் அதிமுகவுடன், பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார்.

இதன் அடுத்தக்கட்டமாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். ‛தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்தார்.
இதற்கானக தொடக்க விழா மதுரை அண்ணா நகரில் உள்ள அம்பிகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் நடந்தது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, எச் ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த பிரசார சுற்றுப்பயணத்தை நாளை நயினார் நாகேந்திரன் சிவகங்கையில் மேற்கொள்ள உள்ளார். அதன்பிறகு அக்டோபர் 14-ம் தேதி செங்கல்பட்டு வடக்கு, அக்டோபர் 15-ம் தேதி சென்னை வடக்கு, 16-ம் தேதி மத்திய சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்பிறகு தீபாவளியையொட்டி ஓய்வு எடுக்கிறார். பிறகு அக்டோபர் 24-ம் தேதி அரியலூர், பெரம்பலூர், 25-ம் தேதி தஞ்சாவூர் வடக்கு, 27-ம் தேதி திருச்சி, 28-ம் தேதி திண்டுக்கல் கிழக்கு, 29-ம் தேதி நாமக்கல் கிழக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அதன்பிறகு நவம்பர்3-ம் தேதி ஈரோடு தெற்கு, 4-ம் தேதி கோவை வடக்கு, 5-ம் தேதி நீலகிரி, 6-ம் தேதி திருப்பூர் தெற்கு என தொடர்ந்து, சேலம், தர்மபுரி, தஞ்சாவூர் தெற்கு என 28 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நயினார் நாகேந்திரன் நவம்பர் 22-ம் தேதி தூத்துக்குடி தெற்கில் நிறைவு செய்கிறார். அதன்பிறகு இரண்டாம்கட்ட பயணத்தை தேனியில் நவம்பர் 24-ம் தேதி தொடங்கி பிற இடங்களில் பயணிக்க உள்ளார்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications