பெரியாரின் வார்தையை உச்சரித்த நயன்தாரா! வாழ்க்கையை மாற்றியது இதுதான் என பெருமிதம்
மதுரை: பெரியார் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில், நடிகை நயன்தாரா பெரியாரின் வார்த்தைகளை உச்சரித்திருப்பது அனைவரிடமும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
'FEMI 9 MEGA CELEBRATION - 2025' நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்த நடிகை நயன்தாரா, சிறப்புரை ஆற்றியிருந்தார். அப்போது பேசிய அவர் 'சுயமரியாதை' குறித்து பேசியிருக்கிறார்.

நயன்தாரா பேசியது என்ன?:
மதுரையில் 'FEMI 9 MEGA CELEBRATION - 2025' நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர், "என்னுடைய வாழ்க்கையில் நான் நம்பும் 2 விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது தன்னம்பிக்கை குறித்த பேச்சோ அல்லது அட்வைஸோ கிடையாது. அதாவது நான் நம்பும் 2 விஷயங்களில் முதல் விஷயம் தன்னம்பிக்கை. இரண்டாவது சுயமரியாதை.
நம்மை யார் என்ன நினைத்தாலும், நம்மை யார் கீழே இறக்க நினைத்தாலும் இந்த 2 விஷயங்களை மட்டும் நாம் விட்டு விடக்கூடாது என நான் நினைக்கிறேன். இதை நீங்களும் பின்பற்றினால் வாழ்க்கை மிக அழகாக இருக்கும். நமக்கு நம் மீது தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதைவிட பெரிய விஷயம் வேற எதுவும் இருக்காது. தன்னம்பிக்கை எப்படி வரும் என்றால் நாம் உண்மையான கடுமையான முயற்சி எடுக்கும்போது வரும்.
யார் என்ன சொன்னாலும் நம்மை எவ்வளவு கீழ் இறக்க நினைத்தாலும் கடுமையாக, தொடர்ச்சியாக உழைத்தால் தன்னம்பிக்கை வரும். அது வந்து விட்டால் வாழ்க்கையே அழகாக மாறிவிடும்" என்று பேசியிருக்கிறார்.
நயன்தாராவை சுற்றும் பஞ்சாயத்துகள்:
இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ம் ஆண்டு நயன்தார திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுடைய திருமண ஆல்பத்தை நெட்பிளிக்ஸ் வெளியிட்டிருந்தது. இதில் தனுஷ் தயாரிப்பில் நயன்தார நடித்திருந்த 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த காட்சி தன்னுடைய அனுமதி இல்லாமல் இடம் பெற்றிருப்பதாகவும், எனவே ரூ.10 கோடி இழப்பீடு வேண்டும் என்று தனுஷ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதனையடுத்து நயன்தாரா பதிலுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த அறிக்கையில், தன்னுடைய திருமண ஆல்பத்தில் பயன்படுத்தப்படும் காட்சிக்காக தனுஷிடம் நீண்ட காலமாக அனுமதி கேட்டு வந்ததாகவும், ஆனால் அப்போது எல்லாம் பதில் சொல்லாத அவர், தற்போது திடீரென நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல, Schadenfreude' எனும் ஜெர்மனி வார்த்தையை பயன்படுத்தி தனுஷை நயன்தாரா திட்டியிருந்தார். 'பிறரது துன்பத்தில் இன்பம் காணுதல்' என்பது இதற்கு பொருளாகும்.

பெரியார் விவகாரம்:
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், பெரியார் குறித்த விவாதம் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியிருந்தது பஞ்சாயத்தாக வெடித்திருந்தது. வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சீர்திருத்தம் செய்தார்? என்று கேள்வி எழுப்பிய சீமான், பெரியார் கூறியதாக சில தகவல்களையும் தெரிவித்திருந்தார். இவை திராவிட இயக்கத்தினரிடையே விவாதங்களை ஏற்படுத்தியது.
அவருக்கு எதிராக திராவிட கட்சிகள் போராட்டதை நடத்தியிருந்தன. அதேபோல, சீமான் மீது புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. புகாரின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. நீதிமன்றமும் வழக்கை விரைந்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில் பெரியாரின் சுயமரியாதை எனும் வார்த்தையை நடிகை நயன்தார உச்சரித்திருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications