மேட்டரே இதுதான்.. ஸ்டாலினுக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் ஒன்னா காய்ச்சல் வந்ததே.. உதயகுமார் புது விளக்கம்
ஸ்டாலினுக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் ஒன்றாக காய்ச்சல் வந்தது எப்படி என உதயகுமார் கேட்கிறார்
மதுரை: ஸ்டாலினுக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் ஒன்றாக காய்ச்சல் வந்தது எப்படி என்று மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளதுடன், அதற்கு புதிதாக ஒரு விளக்கத்தையும் தந்துள்ளார்.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து இன்றைய தினம் அதிமுக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று 2 நாட்களுக்கு முன்பு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்திருந்தார்.

செல்லூர் ராஜு
அதன்படி, மின்கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் அளவில் திரண்டுள்ளனர்.. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரையில் அதிமுகவினர் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு நேற்றே தொற்றி கொண்டது.

அச்சாரம்
அந்தவகையில், மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... இந்த ஆர்பாட்டத்தின்போது ஆர்பி உதயகுமார் பேசியதாவது: தேர்தலில் திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளில் மக்களுக்கு தேவையான ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு ஒரே உதாரணம் கள்ளக்குறிச்சிதான்... தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அதிமுக ஆட்சியில் உயர்த்தப்படவில்லை. ஆனால், இவர்கள் உயர்த்திவிட்டனர்.

அச்சாரம்
ஏற்கனவே கொரோனா பாதிப்பால் மக்கள் இயல்பான வாழ்க்கை இழந்துள்ள நேரத்தில், மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு என்று ஒவ்வொன்றாக உயர்த்தியுள்ளது, மக்களை மேலும் பாதிப்படைய வைத்து வருகிறது.. எடப்பாடி பழனிச்சாமி பொதுசெயலாளராக ஆனவுடனேயே, முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ் 2 பேருக்குமே ஒரே நேரத்தில் காய்ச்சல் வந்துவிட்டது.. அதெப்படி 2 பேருக்கும் ஒற்றுமையாக எப்படி காய்ச்சல் வருகிறது என தெரியவில்லை. தமிழகத்தில் இருந்து இருவரும் தனிமைப்படுத்தி கொள்வதற்கான அச்சாரமாகவே, இருவரும் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர் என்று புது விளக்கம் தந்தார் உதயகுமார்.
Recommended Video

அனாதை
நேற்றைய தினமும், ஓபிஎஸ்ஸை சரமாரி விமர்சித்தார்.. அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு திமுக அரசு உடந்தையாக இருந்தது... மூத்த நிர்வாகிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையை ஓபிஎஸ் உதாசீனப்படுத்தினார். மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கருத்துக்கள் சொன்னார்கள். ஆனால், தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு தனது சர்வாதிகார போக்கில் நடந்துகொண்ட ஓபிஎஸ் இன்று அரசியல் அனாதையாகி விட்டார் என்று கடுமையாக தாக்கி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications