நகை ரசீது எங்கே? திருப்புவனம் அஜித்குமாரிடம் என்ன பேசினீர்கள்? நிகிதாவிடம் கேள்விகளை அடுக்கிய சிபிஐ!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்த அஜித்குமார் எனும் இளைஞர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி நிகிதா என்பவர் தனது தாயுடன் தரிசனம் செய்ய காரில் வந்துள்ளார். காரில் வந்த நிகிதா சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்று இருக்கிறார். கோயில் செக்யூரிட்டியாக இருந்த அஜித் குமாரிடம் கார் சாவி கொடுத்து பார்க் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

CBI police

ஆனால் தரிசனம் முடித்து வந்த பிறகு காரில் இருந்து 5 சரவணன் நகை மற்றும் ரூ.2500 ரொக்கம் திருடு போய்விட்டதாக நிகிதா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை அடுத்து அஜித்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்தனர்‌. இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார்.

காவல்துறை விசாரணை போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஷயம் பெரியதாக வெடிக்கவே சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பெரிதாக எழுப்பினர்.

இதனை அடுத்து வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் அறிவித்தார் மட்டுமல்ல அது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இவ்வளவு நடந்தும் இந்த சம்பவத்தில் பெயர் அடிபட்ட நிகிதா என்பவர் பொது வெளியில் தென்படவே இல்லை. இதனை அடுத்து பல்வேறு தரப்பினரும் நிகிதா மீது குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

இந்த விவகாரம் சிபிஐ விஷம் ஒப்படைக்கப்பட்டதை எடுத்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர். சிபிஐ விசாரணையில் கோயிலுக்கு அருகே இருந்த பெட்டிக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்குகளை காவல்துறையினர் கைப்பற்றியது தெரியவந்தது.

இதனை அடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிகிதா மற்றும் அவரது தாயார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சமன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் இன்று மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு நிகிதா மற்றும் அவரது தாயார் விசாரணைக்காக ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் காணாமல் போன நகைக்கான ரசீது எங்கே? காருக்குள் நகை எந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது? செக்யூரிட்டி அஜித்குமாரிடம் பேசியது என்ன? நகை காணாமல் போன பிறகு யாரிடம் புகார் அளிக்கப்பட்டது? உள்ளிட்ட விஷயங்கள் கேள்வியாக எழுப்பப்பட்டது. இதனை அடுத்து மாலை விசாரணை நிறைவடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+