திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது- அரசு மற்றும் தர்கா தரப்பு ஐகோர்ட்டில் உறுதி
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது என்றும் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படும் என்றும் அரசு மற்றும் தர்கா தரப்பு உறுதி அளித்துள்ளது. இதையடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை.
மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர், திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழாவுக்குத் தடை விதித்து உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் கடந்த ஆண்டு நடந்த கந்தூரி விழாவில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளைப் பலியிட தடை விதிக்கவும், மலையில் அசைவ உணவு சமைக்கவும், பரிமாறவும் தடை விதிக்கக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்தும், இந்த உரிமையை நிலை நாட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தர்கா நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு இறுதியானது. இந்நிலையில், சிக்கந்தர் தர்காவில் கடந்த 21 ஆம் தேதி கந்தூரி மற்றும் சந்தனக்கூடு விழா தொடங்கியது. வரும் ஜனவரி 6 ஆம் தேதி வரை விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு சமைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, கந்தூரி விழாவுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜோதிராமன் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனு தொடர்பாக தர்கா நிர்வாகத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைய தேதிக்கு தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது என்றும் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படும் என்றும் அரசு மற்றும் தர்கா தரப்பு உறுதி அளித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட தடை உள்ளது என்றும் அரசுத் தரப்பு வாதம் வைத்தது. இதையடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை.
-
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications