கொரோனா வேக்சின் போட்டு.. ஒரு மாதம் கழித்து.. மதுரை மருத்துவ மாணவி மரணம்.. பின்னணியில் வேறு காரணம்!
மதுரை: மதுரையில் கொரோனா வேக்சின் எடுத்துக்கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் 26 வயதான இந்த மாணவியின் மரணத்திற்கும், கொரோனா வேக்சினுக்கும் தொடர்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மதுரையை சேர்ந்தவர் ஹரி ஹரிணி. மதுரை மருத்துவ கல்லூரியில் பிஜி அனஸ்தீசியா படித்து வரும் இவர் அதே கல்லூரியை சேர்ந்த டாக்டர் அசோக் விக்னேஷை திருமணம் செய்து கொண்டார். கடந்த நவம்பரில்தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஹரிணிக்கு கொரோனா வேக்சினான கோவிட்ஷீல்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வேக்சின்
கொரோனா வேக்சின் கொடுத்த போது இவருக்கு உடலில் பெரிய மாறுதல் எதுவும் தென்படவில்லை . ஆனால் ஒரு மாதம் கழித்து பிப்ரவரி 5ம் தேதி இவருக்கு உடலில் கடுமையான வலி ஏற்பட்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவரான இவரின் கணவர் விக்னேஷ், வீட்டிலேயே இவருக்கு ஊசி போட்டு இருக்கிறார். வலியை போக்கும் பெயின் கில்லர் ஊசி கொடுத்துள்ளார்.

உடல் சரியில்லை
ஆனால் ஊசி கொடுத்த சில நிமிடத்தில் இவர் மயங்கி விழுந்து வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஹரிணி. 6 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஹரிணி மார்ச் 11ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இவரின் மரணத்திற்கு கொரோனா வேக்சின் காரணமாக இருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்தது .

மரணம்
சமூக வலைதங்களிலும் இது தொடர்பாக அச்சம் பரவியது. ஆனால் மருத்துவர்கள் இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், மூளைக்கு ஆக்சிஜன் செல்லாமல்தான் ஹரிணி இறந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அலர்ஜி ஏற்பட்டு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவருக்கு கொடுக்கப்பட்ட மரப்பூசி காரணமாக இப்படி நடந்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காரணம்
மேலும் கொரோனா தடுப்பு ஊசி காரணமாக இவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை . அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட பெயின் கில்லர் மருந்தை பலகாலமாக மருத்துவர்கள் யாரும் பயன்படுத்துவது இல்லை. இதை பயன்படுத்திய காரணத்தால் ஒருவேளை அந்த பெண்ணுக்கு அலர்ஜி ஏற்பட்டு இருக்கலாம், என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications