இப்போ புரிஞ்சு போச்சு.. சீமானை, அண்ணாமலை ஆதரிக்கிறார்னா அப்போ அதானே.. திருமாவளவன் கேள்வி
மதுரை: பெரியார் தொடர்பான சீமானின் கருத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால், அவர் எத்தகைய அரசியலை பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறி இருப்பதாக கூறியுள்ள திருமாவளவன், பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல என்றும் கூறியுள்ளார்.
பெரியார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சீமான் மீது திமுக மற்றும் பெரியாரிய ஆதரவாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இதனிடையே சீமான் மீது காவல்துறை தரப்பில் பல்வேறு மாவட்டங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீமானின் கருத்து தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கையை வெளியிட்டார். பெரியார் மீதான நன்மதிப்பை நொறுக்க வேண்டும் என்கிற கிரிமினல் உத்தியில் சங் பரிவார்கள் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். சாதி ஒழிப்பு, சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனையை முன்னிறுத்தி இறுதிமூச்சு வரையில் தீவிரமாக களமாடிய பெரியாரை அவர்களால் ஏற்க முடியவில்லை.
தமிழ்நாட்டின் மீது பலமுனைத் தாக்குதலைத் தொடுத்திருக்கும் சனாதன ஃபாசிச சக்திகளையும் அவர்களுக்கு துணை போகும்பிற்போக்கு சக்திகளையும் அடையாளம் கண்டு அம்பலப்படுத்துவோம் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில், சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக இருக்கிறது.
பெரியார் தொடர்பான அவரின் பேச்சு சீமான் பேசுகின்ற அரசியலுக்கே எதிரானதாக போய் முடியும். இந்திய அளவில் பேசக் கூடிய மதவெறி தேசியம் தான் மொழி வழி தேசியத்தின் எதிரியாக இருக்க முடியும். தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியும் அதுதான். அதனைவிடுத்து, தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும், தமிழர்களுக்காகவும் இறுது மூச்சு வரையில் தீவிர களப்பணியாற்றிய பெரியாரை கொச்சப்படுத்துவது ஏற்புடையதல்ல.
இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சீமானின் கருத்தை அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால், அவர் பேசுகிற அரசியல் எத்தகையது என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை ஆதரிப்பார், அண்ணாமலை சார்ந்த சங்பரிவார்கள் ஆதரவளிப்பார்கள். இதனால் சீமான் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். பெரியாரின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். அது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications