‛அய்யய்யோ எம்ஜிஆரா? நான் விவசாயி மா..’ பார்த்ததுமே துள்ளிக்குதித்த பாட்டி! வியந்த அண்ணாமலை! வீடியோ
மதுரை: பாதயாத்திரையின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்ததும் துள்ளிக்குதித்த மூதாட்டி ஒருவர் அவரை பார்த்து எம்ஜிஆரை பார்த்துட்டேன். எம்ஜிஆரை தொட்டு பார்த்துட்டேன் என உற்சாக மிகுதியில் கூறியதும், அதற்கு அண்ணாமலை அளித்த பதிலும் அடங்கிய வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வகுத்து வருகிறார்.

இதன் ஒருபகுதியாக அண்ணாமலை மாநிலத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டார். அதன்படி கடந்த மாதம் 28 ஆம் தேதி ‛‛என் மண்; என் மக்கள்'' என்ற பெயரில் ராமேஸ்வரத்தில் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கினார்.
இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். ராமநாதபுரம், சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிகளில் நிறைவு பெற்ற இந்த யாத்திரை மதுரையை அடைந்துள்ளது. இந்த யாத்திரையின்போது அண்ணாமலைக்கு பாஜகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலையின் பாதயாத்திரையின்போது மூதாட்டி ஒருவர் அவரை பார்த்த துள்ளிக்குதித்தார். அண்ணாமலையின் கையை பிடித்து கொண்ட அந்த பாட்டி உற்சாக மிகுதியில், ‛‛அண்ணாமலையாருக்கு'' என கோஷமிட்டார். மேலும் அண்ணாமலையின் தலையில் கையை வைத்து அவரை வாழ்த்தினார். இதனால் வியந்துபோன அண்ணாமலை பாதுகாப்பு வளையத்தை தாண்டி வந்து அந்த பாட்டியிடம் பேசினார்.
அதன்பிறகு அண்ணாமலை அந்த பாட்டியின் குடும்பத்தை சந்தித்தார். அப்போது அண்ணாமலைக்கு இளநீர் வழங்கப்பட்டது. மேலும் அருகே இருந்த அந்த பாட்டி, ‛‛உங்களை டிவியில் பார்ப்பேன். எனக்கு நீங்கள் அண்ணாமலையார் தான். நீ நடந்து வந்து இருக்க பாரு.. இந்த ஊருக்கே அது புண்ணியம்'' என்றார். இதை கேட்ட அண்ணாமலை, ‛‛இந்த பூமிக்கு வந்ததற்கு நான் தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' என்றார்.
இதையடுத்து அந்த பாட்டி, ‛‛நான் எம்ஜிஆரை தொடனும் நினைச்சேன். இப்போது அடுத்த எம்ஜிஆரை தொட்டுட்டேன். நீ புரட்சி தலைவர்யா'' என மகிழ்ச்சி பொங்க கூறினார். அப்போது குறுக்கிட்ட அண்ணாமலை, ‛‛அய்யோ நான் எம்ஜிஆர்லாம் இல்லை. நான் சாதாரண விவசாயி'' என்றார். இதையடுத்து அந்த பாட்டி அவரது குடும்பத்தினரை அண்ணாமலையிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications