தனியாக துண்டாகிப் போன தலை.. மதுரை பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒருவர் பலி.. பகீர் சம்பவம்!
மதுரை: மதுரை விளாங்குடியில் பாதாளச் சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சி விளாங்குடிக்கு உட்பட் 20 வது வார்டில் புதிதாகப் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் நான்குக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், இன்று வழக்கம் போலப் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. பாதாளச் சாக்கடையில் பணியின்போது மண் சரிந்து முதலில் ஊழியர் ஒருவர் மண்ணுக்குள் புதைந்து உள்ளார்.
உடனடியாக அங்கு இருந்த சமூக ஆர்வலர் கந்தன் என்பவர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சிக்கி இருந்தவரை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாகக் கொண்டு அவரை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றது. ஆனால் மீட்பு பணியின் போது எதிர்பாராத விதமாக போக்லைன் இயந்திரம் பட்டு அவரது தலை துண்டானதாகக் கூறப்படுகிறது. அவரது தலை மட்டும் தனியாக முதலில் எடுக்கப்பட்டுவிட்டது.
இதையடுத்து இப்போது உடலை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர் உயிரோடு இருந்த போது தலை துண்டாகி எடுக்கப்பட்டதா அல்லது உயிரிழந்த பின்னர், இந்தச் சம்பவம் நடந்ததாக என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து இதுபோல பணிகளின் போது மதுரை மாநகரில் ஏற்படும் அசம்பாவிதங்கள் மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்திவிட்டு இதுபோன்ற வேலைகளைச் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications