மேகதாது அணையா? டி.கே. சிவகுமார் சொல்லிட்டா போதுமா? தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கட்ட முடியாது! ஓபிஎஸ்
மதுரை: தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அளித்தது. இதை தமிழகத்தில் உள்ள கட்சிகள் கண்டித்தன. மேலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திரும்ப பெற திமுக வலியுறுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர். சிவக்குமாருக்கு நீர்ப் பாசனத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் நீர்ப் பாசனத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மேகதாது அணை மற்றும் மகதாயி நதிநீர் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் கூறுகையில் கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார். இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம் என்றார்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை ஓபிஎஸ் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக அரசின் அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது. தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளில் சில குறைபாடுகள் இருப்பதால் அங்கீகாரமானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. குறைபாடுகள் நீக்கிய பிறகு அங்கீகாரம் மீண்டும் கிடைக்கும் என்றார். அப்போது அவரிடம் செங்கோல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications