அதிமுக மாநாட்டில் வந்து நின்ற லாரிகள்.. குழாயை திறந்தால் ஆரஞ்ச் நிற தண்ணீர்.. கேட்டால் குளுகோஸாம்!
மதுரை: மதுரை மாநாட்டில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் வெயிலில் சோர்வடையாமல் இருக்க லாரியில் இருந்து குழாய் மூலம் குளுகோஸ் வழங்கப்பட்டது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருக்கான செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் நேற்றைய தினம் மதுரையில் மாநாடு நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் தொண்டர்களுக்கு சைவ உணவு அண்டா அண்டாவாக தயார் செய்யப்பட்டது. அது போல் அவர்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டது. 10 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.
சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி குவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாடாக இருந்தாலும் , வீட்டு சுபவிசேஷமாக இருந்தாலும் பசிக்கு உணவு என்பது முக்கியமான விஷயம். ஆனால் இந்த அதிமுக மாநாட்டில் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் உப்பு, உறைப்பு ஏதும் இல்லை. அது போல் புளி சாதமும் வேகவே இல்லை என தொண்டர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் பசியோடு வந்து சாப்பிட முடியாமல் அவர்கள் வாங்கிய சாப்பாட்டை ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு சாப்பிட முடியாமல் தூக்கி வீசிவிட்டு சென்றனர். ஆங்காங்கே ஒரு வேளை உணவுக் கூட இல்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் உணவை சரியாக சமைக்காமல் இப்படி வீணடிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
பாக்கு மர தட்டுகளில் பரிமாறப்பட்ட உணவுகள் குப்பைகளுக்கு சென்றதால் பலர் வருத்தமடைந்தனர். இப்படியெல்லாம் உணவை வீணடிக்கும் அளவுக்கா கேட்டரிங் கலைஞர்கள் சமைப்பார்கள் என கேள்வி எழுந்தது. தொண்டர்கள் சோர்வடையாமல் இருக்க ஆரஞ்ச் ஃபிளேவர் கொண்ட குளுகோஸ் வழங்கப்பட்டது.
அந்த குளுகோஸ் லாரிகளில் வழங்கப்பட்டது. கார்பரேஷன் வாட்டர் விடுவது போல் உள்ளுக்கு குடிக்கும் குளுகோஸ் வழங்கப்பட்டது. அதிலும் தண்ணீர் கலக்கப்பட்டது. சர்க்கரை சரியாக இல்லை. இதை முண்டியடித்து வாங்குவதற்கு பேசாமல் பச்சை தண்ணீரை குடித்துவிடலாமே என்ற தொண்டர்கள் கருதும் நிலை இருந்தது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து 1000 முதல் 1500 வாகனங்களில் தொண்டர்கள் வந்தனர். அவர்களுக்கு கைச் செலவுக்காக ரூ 100 கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இப்படி வெளியூரில் இருந்து வந்த தொண்டர்களுக்கு உணவும், குளுகோஸ் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட தண்ணீரும் சரியில்லாமல் இருந்தால் எப்படி? எல்லாரும் உழைப்பதே ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான்!
லாரிகளில் சுகாதாரம் இல்லாமல் ஜூஸ் வழங்கலாமா, 10 லட்சம் பேருக்கான உணவுக்கே பாத்திரம் இருந்த போது இது போன்ற ஜூஸுக்கு ஏதாவது ஒரு பாத்திரங்களில் வைத்து கொடுத்திருக்கலாம். இல்லாவிட்டால் சிறிய பெட் ஜார்களில் எத்தனையோ ஜூஸ்கள் வந்துவிட்டன. அவற்றை கொடுத்திருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு பச்சதண்ணீரை குளுகோஸ் என கொடுத்து ஏமாற்றியுள்ளனர் என தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஓபிஎஸ் கூறுகையில் எடப்பாடி பழனிசாமியின் மாநாடு தோற்றுவிட்டது. 2 நாளுக்கு முன்னாடி கிளறிய புளி சாதத்தை கொடுத்துள்ளனர். இதனால் தொண்டர்கள் சாப்பிட வழியில்லாமல் தவித்து கொல பட்டினியாக இருந்தது வேதனை அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications