Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண்டாரத்தி புராணம் பாடல்.. மீண்டும் சர்ச்சையில் "கர்ணன்.." மாரி செல்வராஜுக்கு ஹைகோர்ட் கிளை நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற பாடலை நீக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கலைப்புலி தாணு தயாரிப்பில்.. பரியேறும் பெருமாள் திரைப்பட புகழ் இயக்குனர், மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் கர்ணன்.

கர்ணன் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்கள் யூடியூப் வலைத்தளத்தில் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.

 கண்டா வரச் சொல்லுங்க சர்ச்சை

கண்டா வரச் சொல்லுங்க சர்ச்சை

"கண்டா வர சொல்லுங்க.. கர்ணனை கையோடு கூட்டி வாருங்கள்.." என்று துவங்கும் ஒரு பாடல் இப்படி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் இது நாட்டுப்புற பாடகர் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் இசையமைத்து பாடிய மெட்டு என்று சர்ச்சை எழுந்தது. தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு உரிய நிதி உதவிகளை வழங்கிட வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

பெண் பற்றி பாடல்

பெண் பற்றி பாடல்

இந்த சர்ச்சை ஒரு பக்கம் என்றால் பண்டாரத்தி புராணம் என்ற பெயரில் கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடல் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. தனுஷ் இதை பாடியிருந்தார். கிராமப்புற வாழ்வியலை இந்த பாடல் எடுத்து இயம்புவதாக இருந்த போதிலும், பண்டாரத்தி என்று குறிப்பிட்டு திரும்பத் திரும்ப அந்த பாடலில் ஒரு பெண் தொடர்பான வரிகள் வருகின்றன. ஆனால் இது ஒரு ஜாதி பெயராகும்.

ஈவ் டீசிங் அச்சம்

ஈவ் டீசிங் அச்சம்

இந்த பாடல் சமூகத்தில் புழக்கத்தில் வரும் போது குறிப்பிட்ட அந்த ஜாதியைச் சேர்ந்த பெண்களை இந்த பாடலை பயன்படுத்தி கிண்டல் செய்வதற்கு விஷமிகள் பயன்படுத்தக் கூடும் என்று அச்சம் எழுந்தது. சாமி திரைப்படத்தில் இடம்பெற்ற "கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா.." என்ற பாடல் வெளியானபோது ஈவ்டீசிங் செய்வோர் இந்த பாடலை அதிகம் பயன்படுத்தினர். எனவே இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்பு அலைகள் கிளம்பியது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பாட்டை நீக்க வேண்டும்

பாட்டை நீக்க வேண்டும்

இந்த நிலையில்தான் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பண்டாரத்தி புராணம் பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை நீக்கும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஹைகோர்ட் நோட்டீஸ்

ஹைகோர்ட் நோட்டீஸ்

இதையடுத்து, திரைப்பட தணிக்கை துறையின் மண்டல அலுவலர், படத்தின் இயக்குனருக்கு மாரி செல்வராஜ், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பிரபு என்கிற புல்லட் பிரபு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

பண்டாரம் ஜாதி மக்கள் உணர்வு

பண்டாரம் ஜாதி மக்கள் உணர்வு

தனது மனுவில் அவர் கூறுகையில், கடந்த ஜனவரி 19ஆம் தேதி கர்ணன் திரைப்படத்தின் டீஸர் மற்றும் கண்டால் வர சொல்லுங்க பாடல் வெளியிடப்பட்டது. பண்டாரத்தி புராணம் என்ற பெயரிலும் பாடல் வெளியிடப் பட்டுள்ளது. சக்காளத்தி என்ற வரிகள் அதில் இடம் பெற்றுள்ளன. ஆண்டிப்பண்டாரம் என்பது பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகம். பண்டாரம் என்ற பெயரிலும் யோகேஸ்வரர் என்ற பெயர்களிலும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள். கோவில்களில் பூ அலங்காரம் செய்பவர்களில், பெரும்பாலானோர் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களை காயப்படுத்தும் விதமாக இந்த பாடல் இடம்பெற்றுள்ளது விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே இந்த பாடலுக்கு வழங்கப்பட்ட அனுமதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். யூடியூப் சேனல் மற்றும் திரைப்படத்தில் இருந்து இந்த பாட்டை நீக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+