பழனி டூ மதுரைக்கு போன அரசு பஸ்.. சீட்டில் பணத்துடன் கிடந்த பை.. யோசிக்காமல் கண்டக்டர் செய்த காரியம்
மதுரை: ஒரு பக்கம் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறினாலும், இன்னொரு பக்கம் மனிதாபிமானத்தோடு செயல்படும் எண்ணற்ற மக்கள் இவ்வுலகில் உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாய் தான் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மனிதாபிமானத்தோடு செய்த ஒரு செயல் இப்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தற்போதைய நவீன உலகில் அனைவரும் இயந்திரம் போல், ஓடோடி உழைத்து வருகிறார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைத்தாலும் கூட நேரமில்லை என்று கடந்துபோய்விடுகிறார்கள். ஒருசிலர் இப்படி இருந்தாலும், இன்னும் ஏராளமானோர் தம்மால் முடிந்த மற்றும் முடியாத உதவிகளை கூட ஓடோடி செய்து வருகிறார்கள்.

பணத்தை தேடி ஓடோடி உழைத்தாலும், நமக்கு லாட்டரியில் பணம் அடித்துவிடாதா?, சாலையில் மூட்டையாக பணம் கிடைத்துவிடாதா? என்றும் பகல் கனவு கண்டாலும், உண்மையாக சாலையில் கேட்பாரற்று கிடந்தால் அந்த பணத்தை அப்படியே எடுத்துக்கொள்ளாமல், இந்த பணத்தை தொலைத்தவர்கள் எப்படி கஷ்டப்படுவார்களோ என மற்றவர்களின் வேதனையையும் நினைத்து பார்த்து, அந்த பணத்தை போலீஸ் நிலையத்தில் கொண்டுபோய் பத்திரமாக ஒப்படைக்கத் தான் நினைப்பார்கள்.
நாம் பணத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாலும், கீழே கிடக்கும் தங்க நகைகள், பணம் போன்றவற்றை பத்திரமாக போலீஸ் நிலையத்திலோ, அல்லது உரியவரிடமோ ஒப்படைக்கவே நினைக்கின்றார்கள். இப்படித்தான் மதுரையை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் பஸ்சில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.60 ஆயிரம் பணத்தை பத்திரமாக உரிய பயணியிடம் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பணத்தை பத்திரமாக உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு பஸ் ஒன்றில், டிரைவராக ஈஸ்வரன் மற்றும் கண்டக்டராக சத்தியமூர்த்தி என்பவரும் பணி செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று பஸ் பழனியில் இருந்து மதுரைக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது அழகாபுரியில் கலையரசி என்ற பெண் பஸ்சில் ஏறினார். அப்போது அவர் பையில் ரூபாய் 60 ஆயிரம் பணம் வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் இறங்கும்போது பணம் இருக்கும் பையை பஸ்சிலேயே வைத்துவிட்டு இறங்கிவிட்டார்.
இதற்கிடையே பஸ்சில் இருந்த பையை கவனித்த கண்டக்டர் சத்தியமூர்த்தி அந்த பையை பத்திரமாக எடுத்து வைத்ததோடு, இதுபற்றி டெப்போ அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதற்கிடையே பணத்தை காணாததால் பல இடங்களில் தேடிப்பார்த்த கலையரசி, இறுதியில் பஸ்சில் தவறவிட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதையடுத்து அந்த வழித்தடத்தில் இயங்கும் மற்ற டிரைவர்களிடம் இது பற்றி கேட்டிருக்கிறார். இதையடுத்து டெப்போ அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பணம் கலையரசியிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
பயணி தவறவிட்ட பணத்தை மனிதாபிமானத்தோடு பத்திரமாக ஒப்படைத்த அரசு பஸ் டிரைவர் ஈஸ்வரன் மற்றும் கண்டக்டர் சத்தியமூர்த்திக்கு சக ஊழியர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே கேரளாவில் பெண் ஒருவர் பழைய பொருட்களை எடைக்கு போட்ட போது தவறுதலாக அவரது தங்க நகைகளையும் சேர்த்து குக்கரில் வைத்தபடி கொடுத்துள்ளார். அந்த பொருட்களை தமிழக வியாபாரி வாங்கியிருக்கிறார்.
ஆனால் அந்த குக்கருக்குள் தங்க நகை இருப்பதை பார்த்த தமிழக வியாபாரி, பத்திரமாக அந்த நகையை உரிய பெண்ணிடம் வீட்டுக்கு கொண்டு போய் ஒப்படைத்தார். பெண் ஒருவர் தவறுதலாக தங்க நகையை கொடுத்தபோதும் மனிதாபிமானத்தோடு, அவரிடம் திருப்பி ஒப்படைத்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தமிழக வியாபாரிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.












Click it and Unblock the Notifications