பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்கலையா.. மதுரை மண்டலத்தில் 8 மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்
மதுரை: மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்காக அடுத்த மாதம் 12-ந் தேதி குறை தீர்ப்பு முகாம் நடத்துகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடு போக முடியாது. அதற்கு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாஸ்போர்ட் சேவா இணையதளம் https://www.passportindia.gov.in/ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதில் பதிவு செய்த பின்னர், வீட்டிற்கு அருகில் உள்ள "Passport Office"-ஐத் தேர்வு செய்து, இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட்டை பொறுத்தவரை சாதாரண வகை மற்றும் தட்கல் வகை என இரு வகை ஆப்ஷன்கள் உள்ளன.

விண்ணப்பித்த பின்னர், போலீஸ் விசாரணைக்கு பின்னர் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பலருக்கும் பாஸ்போர்ட் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அதில் சிலருக்கு சந்தேகம் இருக்கும். அவர்களுக்காக முகாம்கள் மதுரை மண்டலத்தில் நடைபெற உள்ளது.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "இந்திய வெளியுறவுத்துறையின் பாஸ்போர்ட் சேவைப்பிரிவின் கீழ் செயல்படும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்காக அடுத்த மாதம் 12-ந் தேதி குறை தீர்ப்பு முகாம் நடத்துகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். அதாவது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்கு முன்னதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தும் பாஸ்போர்ட் கிடைக்காத மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், சுய கையப்பமிட்ட விண்ணப்ப கடிதத்தில் தங்களது பாஸ்போர்ட் விண்ணப்ப எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு விரைவு தபால் மூலம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், பாரதி உலா வீதி, ரேஸ் கோர்ஸ் ரோடு, மதுரை-625002 என்ற முகவரிக்கு வருகிற 4-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப உறையின் மேல் "பாஸ்போர்ட் குறைதீர்ப்பு முகாம்-2025" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். அத்துடன், விண்ணப்ப நகலை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 4-ந் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications