அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன்
மதுரை: பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் மீது அவதூறாக பேசியதாக கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. இவர் அருமனையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி கிறிஸ்துவ, இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பில் பழங்குடியின மக்களுக்காக போராடி உயிரிழந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மாநில அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
இவரது பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகியது. இதையடுத்து ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு ஜார்ஜ் பொன்னையா மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரர் வயது முதிர்ந்தவராகவும், இதய நோயாளியாகவும் இருப்பதால் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி தில்லை நகர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்.
வரும் காலங்களில் மதம், அரசியல், பிரச்சனைகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது எனவும் ஹைகோர்ட் கிளை அறிவுரை வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications