ரத்தத்தால் அழைப்பு விடுத்த ரத்தத்தின் ரத்தங்கள்! தேவர் ஜெயந்தி.. எடப்பாடிக்கு இப்படி ஒரு அழைப்பா?
மதுரை: வருகிற 30-ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா நடைபெற இருக்கும் நிலையில் அவருக்கு மரியாதை செலுத்த பழனிச்சாமி மதுரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் ரத்தத்தில் கைநாட்டு வைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் திருமகனார் என அழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவானது அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.
முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் கூட்டம் என இரண்டு நாட்களும் பசும்பொன் கிராமமே களை கட்டி காணப்படும். திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி அந்த கட்சியின் பிரதான தலைவர்கள் அனைவரும் நிச்சயம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள்.

பசும்பொன் தேவர் ஜெயந்தி
தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கும் நிலையில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் அங்கு வந்திருக்கிறார். இதேபோல தமிழக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். அஞ்சலி நிகழ்ச்சி என்பதை தாண்டி அப்பகுதி மக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை கடவுள் போலவே பார்க்கின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி வருகை
விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து அவரை தரிசிப்பதும் வழக்கம். அந்த வகையில் வருகின்ற 30ஆம் தேதி தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை, அதிகாரிகள், மாவட்ட காவல் துறையினர், அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குருபூஜை நிகழ்ச்சி
இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார். இதற்காக எடப்பாடி பழனிச்சாமி மதுரை வருகை தர இருக்கிறார். அவர் வருகையை முன்னிட்டு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதிமுகவினர் அழைப்பு
இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள வேண்டுமென அவருடைய கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் தங்களது பெயருடன் ரத்தத்தில் கைநாட்டு வைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ரத்தத்தின் ரத்தம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுகவினர் ரத்தத்தின் மூலம் அழைப்பு விடுத்திருப்பதாக கூறி வருகின்றனர் அதிமுகவினர்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications