மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரண்ட் கட் ஆகாமல் போயிருந்தாலும் கூட அந்த 5 பேரும் இறந்திருப்பார்கள்.. மதுரை ஜிஎச் டீன்

Google Oneindia Tamil News

Recommended Video

    கரண்ட் கட் ஆகாமல் இருந்திருந்தாலும் அவர்கள் இறந்திருப்பார்கள்.. மதுரை ஜிஎச் டீன்!-வீடியோ

    மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கவில்லை. அவர்கள் நோய் முற்றிய நிலையில் சீரியசாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனவே நோயின் காரணமாக தான் பலியாகி உள்ளனர் என மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் வனிதா, 5 பேர் இறந்தனர் என்பது உண்மையில்லை. 3 நோயாளிகள் தான் பலியாகியுள்ளனர் அதுவும் நோய் காரணமாக தான் பலியாகியுள்ளனர்

    Patients dont died due to power resistance .. Madurai Government Hospital Dean said

    மின்தடை ஏற்படாமல் இருந்திருந்தால் வட அவர்கள் அந்த தருணத்தில் நோய் முற்றியதன் காரணமாக உயிழந்திருப்பார்கள் மேலும் அவர்கள் இறந்தது குறித்து எனக்கு தாமதமாகவே தெரிய வந்தது

    மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவு, விபத்து பிரிவு என அனைத்து பிரிவு பகுதிகளிலும் தேவையான மருத்துவர்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். அதே போல் மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் தான் உள்ளன.

    உயிரிழந்த 3 பேரும் ஒரு நாள் முன்னதாக ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தான். 3 பேர் மின் தடை காரணமாக உயிரிழக்கவில்லை என்பது உறுதியாக கூற முடியும், தனியார் மருத்துமனையில் இருந்து அனுமதிக்கப்பட்ட இருவரும், செயற்கை சுவாசத்தோடு தான் அனுமதிக்கப்பட்டனர்.

    உபகரணம் காரணமாக அவர்கள் இறக்கவில்லை. மருத்துவமனையில்165 சுவாச கருவிகள் உள்ளது. அதற்கு என தனியாக நியமிக்கபட்ட ஊழியர்கள் உள்ளனர். மின்சாரம் தடைபட்டது 6:20 மணி முதல் 7:40 வரை மட்டுமே

    சம்பவம் தொடர்பாக அரசுக்கு முதற்கட்ட தகவல் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் முக்கிய பிரிவுகளில் மின்தடை ஏற்பட்டால் இயங்கும் வகையில் 17 UPS பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. அந்தப் பணியினை தனியார் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது என்றார்.

    English summary
    Patients dont died due to the power cut. They were admitted to hospital with serious illness. so they died due to illness said by hospital dean
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X