50 வாரங்கள்தான்.. உங்கள் சக்தியை காட்டுவதற்கான நேரம் வருகிறது.. மதுரையில் கமல்ஹாசன் அதிரடி பேச்சு
மதுரை: மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் ஐடா வளாகத்தில் நடைபெற்ற இளம் தொழில் முனைவோருக்கான மாநாட்டில் (YESCON-2020) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பங்கேற்றார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேடையில் பேசியதாவது; அரசியல்வாதி குட்டிக்கதை சொன்னால் அதை கை தட்டி கேட்டு இத்தனை நாள் அமைதியாக இருந்து விட்டோம். கேள்வி கேட்க மறந்து விட்டோம்.

தமிழகம் முதலிடம், தமிழகம் முதலிடம் எனக் கூறி, அரசரின் ஆடை போல கூறுகிறார்கள். ஆனால் அவரின் அம்மணம் தெரியவில்லை. எல்லா விருதுகளையும் வாங்கிக்கொண்டு தமிழகம் முதலிடம் முதலிடம் என்று சொல்கிறார்கள். விவசயிகளை காப்பாற்ற வேண்டிய உபகரணங்களை கண்டுபிடிக்க வேண்டிய வேலையும், அதற்கான வாய்ப்பும் நம்மிடம் உள்ளது. மக்கள் நீதி மய்யம் அதைச் செய்யும்.
தமிழகத்தில் கண்டுபிடிப்பு என்பது ஒரு மாற்றம் தான். நான் அரசியல்வாதி தான். இனிவரும் அரசியல்வாதி இனிமேல் என்னை போல் இருக்க வேண்டும்.
தங்க பிஸ்கெட்டிற்கும் சாப்பிடும் பிஸ்கெட்டிற்கும் ஒரு மாதிரியான ஜிஎஸ்டி வரி உள்ளது. சினிமாத்துறையிலும் ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
மக்கள் நீதி மய்யத்தில் சூட்டும் கோட்டும் போட்டுகொண்டு தொழில்முனைவோர்கள் வரலாம். மக்கள் நீதி மய்யம் நல்ல கட்சி. ரௌத்திரம் பழகு என்பது போல அரசியலும் பழக வேண்டும். அரசு கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு மதுவை அரசு எடுத்து நடத்தும் அவலம் நிலவுகிறது. தெருவில் உள்ள பிரச்சனைகள் முன்னின்று தீர்வு காண வேண்டும் அதுவே தீர்வு. பெரிய ஊழலை தடுக்க வந்திருக்கும் எங்களுக்கு பெரிய உதவி தேவை. வரும் விருதுகளை பெற்றுகொண்டு தமிழகம் முன்னேறுவதாக அரசு நினைக்கலாம் நாம் நினைக்ககூடாது. தங்கம் வைரம் கிடைத்தாலும் தரையில் விவசாயத்தை அழிக்ககூடாது.
இன்னும் 50 வாரங்களில் உங்களின் சக்தியை காட்டுவதற்கான நேரம் வருகிறது. அடுத்த தலைமுறையின் வெற்றியை கண்டுகொள்ளாமல் தூங்கமாட்டேன்.
நான் அரசியல்வாதி, இனிவரும் அரசியல்வாதிகள், என்னை போல் இருக்க வேண்டும். ஆளும்கட்சியினர் தொழில் முனைவோரின் 30 சதவித லாபத்தை பறிக்கின்றனர். மக்கள் நீதி மய்யத்திற்கு வாய்ப்பளித்தால் தொழில்முனைவோருக்கான 30 சதவிதம் லாபம் கிடைக்கும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications