அடிச்சுத் தூக்கப் போகுது அதிமுக.. கோயல் பேசும் போதே வந்த பஞ்சாயத்து! நீட் மையத்தில் பாஜக கூட்டமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் மிகவும் பரபரப்பாக ள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மாறுபட்டமுடிவுகளை சொல்லி இருக்கும் நிலையில், யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதிபட சொல்லியுள்ளார். மதுரை விமான நிலையம் அருகே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

Piyush Goyal

இதற்கிடையே, இந்த நிலையில் நீட் தேர்வு மையத்தில் பாஜக முகவர்கள் கூட்டம் நடைபெற்றதாக கூறி மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக கூட்டம்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தொகுதிகளின் பாஜக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் முதல் நாகர்கோவில் வரை பல முக்கிய தொகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல், "வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் குறித்து எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும். இந்த வெற்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழர்களின் மரபு மற்றும் பண்பாட்டை பாதுகாப்பதற்கும் உதவும் நல்ல ஆட்சியை உருவாக்கும்" என்று கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தல் 2026

மேலும் அவர், பெண்களின் நலன் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் ஆட்சி அமைவது அவசியம் என்றும், தற்போதைய திமுக அரசு வெளியேறும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மே 4ஆம் தேதிக்குப் பிறகு புதிய ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும் என்றும், அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே முன்னிலை வகிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

கருத்துக்கணிப்புகள்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அவை தங்கள் வேலையைச் செய்கின்றன. நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். தேர்தலில் வெற்றி பெறுவது தான் எங்கள் குறிக்கோள். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டுள்ளோம்" என்று கூறினார்.

திமுக ஆட்சி

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் திமுகவே ஆட்சிமையக்கும் என்கின்றனர். டைம்ஸ் நவ், ஜேவிசி போன்றவை அதிமுக ஆட்சி என்றும், ஆக்சிஸ் மை இந்தியா, காமக்யா ஆகியவை தவெக என்றும் சொல்கின்றனர். இந்நிலையில், கடந்த காலங்களைப் போல இல்லாமல் தேர்தல் முடிவுகளை கணிப்பது ஏன் இவ்வளவு கடினமாகி விட்டது என்ற கேள்வி இப்போது அரசியல் வட்டாரங்களில் மிக அதிகமாக பேசப்படுகிறது.

NDA வெற்றி

வாக்குப் பதிவு முடிந்த பிறகும் மக்கள் ஆதரவு இந்தக் கட்சிக்குத் தான் ஆதரவாக இருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. 2026 சட்டசபை தேர்தல் கணிக்க முடியாத தேர்தலாக மாறியுள்ள இந்த நிலையில் தான், தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

பெற்றோர்கள் போராட்டம்

இந்த கூட்டமானது மதுரை நாகரத்தினம் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கிடையே அந்த கல்லூரியில் தான் இன்று நீட் தேர்வு நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு நடைபெறும் மையத்தில் மத்திய அமைச்சர் தலைமையில் பாஜக கூட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் திரண்ட பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாளை தேர்வு நடக்க இருக்கும் நிலையில் அதற்கு முதல் நாள்,அரசியல் கட்சி ஆலோசனை நடத்த அனுமதித்தது ஏன்? என பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+