PM Modi Temple: திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி.. மலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு!
மதுரை: தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி இன்று மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மோடி வருகையையொட்டி திருப்பரங்குன்றம் கோயில், மலைப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது கூட்டணியைப் பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில், அன்புமணி தலைமையிலான பாமக, அமமுக, தமாகா, இந்திய ஜனநாயகக் கட்சி, தமமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. கடந்த மாதம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கட்சிகளின் தலைவர்கள் மேடையேறினர்.

இன்னும் சில கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாக அந்த கூட்டணித் தலைவர்கள் தொடர்ச்சியாகக் கூறி வந்தனர். மேலும் தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார்கள் என்று கூட்டணித் தலைவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்கள் இருவரும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளனர். இது அதிமுக - என்.டி.ஏ கூட்டணியினருக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரமாண்ட மாநாடு இன்று மாலை மதுரையில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தார். அவரை ஆளுநர் ஆர்.என். ரவி, இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார். இரவு ஆளுநர் மாளிகையிலேயே பிரதமர் தங்கி ஓய்வெடுத்தார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி சென்றார். அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுமார் 2,700 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு நாட்டுக்கும் அந்த திட்டங்களை அர்ப்பணித்தார்.
அதனை தொடர்ந்து இன்று மதியம் மதுரை வந்தடைந்த பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. மோடியின் வருகையை யொட்டி கோவில் மற்றும் மலைப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இதற்காக 150 ஏக்கர் பரப்பில் பொதுக்கூட்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இன்று மாலை நடைபெறும் NDA கூட்டணி கட்சிகளின் 2வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதைத்தொடர்ந்து இன்று இரவு 6 மணி அளவில மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு டெல்லி செல்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications