மதுரை ஆதீனம் பாடிய தேவாரம்.. மெய் மறந்து கேட்ட பிரதமர் மோடி.. கண்ணீர் விட்ட நெகிழ்ச்சி சம்பவம்
மதுரை: நான் தேவாரம் பாடி காண்பித்த போது பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் விட்டதாக மதுரை ஆதீனம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி நெகிழச்சியாக தெரிவித்துள்ளார்.
மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத், அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் இரண்டு நாள் துறவியர் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி பேசியதாவது: மத சார்பற்ற நாடு என்கிறோம். மசூதிகள் முஸலீம்களின் கடடுப்பாடடில உள்ளன.

கோயில்கள்
தமிழகத்தில் கோயில்கள், அறநிலையத் துறையின் கீழ் உள்ளன. இவற்றை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கக் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதியை பூச மாட்டோம் என்கிறார்கள். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஒரு அமைச்சருக்கு விபூதி பூசப்பட்டது.

சங்கி இல்லை
அதை அவர் அழித்து விட்டார். இதைக் கேட்டால் என்னை சங்கி , மங்கி என்கிறார்கள். நான் சங்கியும் இல்லை, மங்கியும் இல்லை. சமயத்திற்காக பாடுபடுகிறேன். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை பிரதமராக வந்த பின்னர் நரேந்திர மோடி மீட்டுள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன்.

பிரதமர் கண்ணீர்
இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார். நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார். இந்து கடவுள்களை சிலர் விமர்சிக்கிறார்கள். மாற்று சமயம் பற்றி சினிமாவில் ஒரு காட்சி வந்தால், அதற்கு எதிராக உடனே எதிர்வினையாற்றுகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளுக்கு குத்தகை, வாடகையை சம்பந்தப்பட்டோர் முறையாக செலுத்தினர்.

கோயில்களின் குத்தகை வாடகை
காங்கிரஸ்- திமுக, அதிமுக ஆட்சிகளில் குத்தகை, வாடகையை முறையாக செலுத்த தவறிவிட்டனர். இதனால் கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. திருத்துறைப்பூண்டியில் ஒரு கோயிலுக்கு சொந்தமான சொத்தை அனுபவிக்கும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர், 21 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளார். அக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டப் போவதாக மிரட்டினார். இதை பற்றி பேசினால் தடாலடியாக எதிர்ப்பதாக கூறுகின்றனர். இதற்காக பிரதமர் மோடியை சந்தித்து பேசும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என்றார் ஆதீனம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications