இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! நடந்ததை மறப்போம்..இணைந்து பயணிப்போம்! திருமாவளவனுக்கு அன்புமணி அழைப்பு!
மதுரை : திருமாவளவன் உட்பட பட்டியலின தலைவர்கள் அனைவரும் ஒன்று சேருங்கள், இணைந்து பயணிப்போம் என வெளிப்படையாக அழைப்பு விடுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இரு சமுதாயங்களையும் சூழ்ச்சியின் அடிப்படையில் திமுக பிரிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனர்.
மதுரையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக 36ஆம் ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அக்கட்சியினர் தலைவரான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்," திராவிட கட்சிகளால், தென் தமிழகம் வளர்ச்சி அடையவில்லை. இந்த சமுதாயம் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், இந்த சமுதாயம் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என சூழ்ச்சியால் காலங்காலமாக , அரசியல் செய்து கொண்டிருப்பது இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான்.
அதிலும் குறிப்பாக நாம் சொல்வது திமுகவை தான். சூழ்ச்சி செய்வதில் பிஎச்டி முடித்தவர்கள் திமுகவினர். வட தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு சமுதாயம் சேர்ந்தால், வளர்ச்சி வரும் முன்னேற்றம் வரும். அவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால், இவர்களுக்குள் கொளுத்தி போட்டு சண்டை வர வைப்பது தான் திராவிட மாடல்.
சாராயத்தை கொடுத்து மதுவை கொடுத்து குடிகார சமுதாயமாக மாற்ற வேண்டும் என்பது தான் திராவிட கட்சியின் கொள்கை. கேடுகெட்ட மாடல். வெட்கங்கெட்ட மாடல் தமிழ்நாடு இளைஞர்களின் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கும் திமுக. மக்களைப் பற்றி எந்த அக்கறையும் கிடையாது திமுகவிற்கு, மதுவை திணிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் முதல் நாள் முதல் கையெழுத்து என பிரச்சாரம் செய்தோம்.
இதைப் பார்த்த பிறகு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என ஸ்டாலின் கூறினார். மூன்று ஆண்டுகள் ஆகிறது ஆட்சிக்கு வந்து ஏதாவது ஒரு கடையை மூடி இருக்கிறீர்களா. அன்று என்ன வசனம் பேசினீர்கள். அன்று சகோதரிக்கு கனிமொழி , தெரு தெருவாக சென்று வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார்கள். அண்ணா திமுக அன்று நாசம் படுத்துகிறது என பிரச்சாரம் செய்தார்கள் இப்பொழுது ஏன் வாய் திறக்கவில்லை.
மூன்று ஆண்டு காலம் அண்ணன் தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். எப்படியாவது 500 அல்லது ஆயிரம் கடையை மூடி தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களை காப்பாற்றலாம் சண்டை போடலாம் அல்லவா. கனிமொழி அவர்களின் எண்ணம் சரியான எண்ணம் தான் ஆனால் அதற்கு ஏற்ற சூழல் இல்லை. முதலமைச்சர் அவர்களுடைய கருத்துக்களை கேட்கும் என் எண்ணங்கள் இல்லை.
முதலமைச்சரை சுற்றி நான்கு அமைச்சர்கள் என்ற பெயரில் வியாபாரிகள் உள்ளார்கள். அந்த நான்கு பேருக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கும் திருமாவளவனுக்கும் போட்டி என்பதெல்லாம் கிடையாது. திருமாவளவனின் எண்ணமும், மருத்துவர் அய்யாவின் எண்ணமும் ஒன்றுதான் . ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய இலக்கு. அவர் வேறு திசையில் சென்று விட்டார் அவ்வளவுதான். இன்று அவர் எந்த திசையில் போக வேண்டும் என அவரே குழப்பத்தில் இருக்கிறார். என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என குழப்பமாக இருக்கிறார். கடந்த காலங்களில் பிரச்சனைகள் எல்லாம் இருந்திருக்கிறது அதை நான் மறுக்கவில்லை.
எவ்வளவு காலம் தான் கடந்த காலத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க போகிறீர்கள். வரும் காலம் என்ன செய்ய வேண்டும் , சமூக நீதியை எப்படி பெற வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். திமுகவை நம்பி சென்றால் உங்களுக்கு கிடைக்கப் போவது பட்டை நாமம் தான். திருமாவளவனை மட்டும் சொல்லவில்லை பட்டியல் இன சமுதாயத்தில் இருக்கும் அனைத்து தலைவர்களையும் கேட்கிறேன். எங்கள் அய்யா பின்னால் வாருங்கள் உங்களுக்கு விடிவு கிடைக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும். ஐயாவிற்கு ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு கொடுங்கள்.
மோதி கொண்டால் இரண்டு சமுதாயத்திற்கும் தான் பாதிப்பு. இரண்டு சமுதாயம் மோதிக்கொண்டால் திமுகவிற்கு தான் நன்மை. வட தமிழ்நாட்டில் இரண்டு சமுதாயங்கள் மோதிக் கொண்டிருக்கிறது. பாதிப்பு அவர்களுக்கு தான். ஆனால் நன்மை திமுகவிற்கு. இது திமுக உடைய சூழ்ச்சி. போதும் இது போன்ற சூழ்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நிச்சயமாக நாமெல்லாம் ஒன்று சேரக்கூடிய காலம் இது. இதை ஆணவத்தில் சொல்லவில்லை நம்பிக்கையுடன் கூறுகிறேன்" என்றார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications