திருப்பரங்குன்றம் மலையில் ஆடு அறுக்க முயற்சி.. பள்ளிவாசல் நிர்வாகிகளை தடுத்த போலீஸ்.. என்ன நடந்தது?
மதுரை: ஆடு, கோழியுடன் திருப்பரங்குன்றம் மலை மீது ஏற பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது உயிர்ப்பலி கொடுக்க இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காவல்துறையினர் பள்ளிவாசல் நிர்வாகிகளை தடுத்திருப்பது வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மதநல்லிணத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து வருகிறது. மலைக்கு கீழ் சுப்பிரமணிய சுவாமி கோவிலும், மலை மீது சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவும் இருக்கிறது. இந்து மற்றும் இஸ்லாமியர்களின் ஒற்றுமைக்கு சான்றாக இந்த இடம் இருப்பதாக மக்கள் பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக சிக்கந்தர் தர்காவில் கந்தூரி நடத்த ஆடு, சேவலுடன் சென்றவர் தடுத்து நிறுத்தப்பட்டார். மலை மீது உயிர்ப்பலி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியதால், இஸ்லாமியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பேசுபொருளானது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தர்காவில் நேற்றிரவு சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
இதனால் வழிபாடு நடத்த வந்த இஸ்லாமியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு பிறகே மலை மீது ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை ஆடு, கோழி பலியிட்டு சமபந்தி விருந்து நடைபெறும் என்றும், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று செய்திகள் சோசியல் மீடியாவில் பரவியது.

ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை மீது கந்தூரி நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக திருப்பரங்குன்றம் மலை மீது ஏறும் பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி அறுக்க இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் தடுத்த நிறுத்தப்பட்டு, தர்காவில் வழிபாடு நடத்த மட்டுமே அனுமதி இருக்கிறது. ஆடு, கோழி பலியிடக் கூடாது என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆடுகளை தங்களின் தோள்களில் போட்டு கொண்டு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஆடுகளுடன் மலை மீது ஏற முயற்சித்த போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதன்பின் கோஷங்கள் மட்டும் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீண்டும் பள்ளிவாசல் நோக்கி சென்றதால், திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications