ஸ்டாலினுக்கு தெரியாமல் பேசியிருக்க மாட்டார் ஆர் எஸ் பாரதி.. பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மதுரை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியாமல் ஆர் எஸ் பாரதி பேசியிருக்க மாட்டார் என மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த நிலையில் அதனை பெரிதுபடுத்தகூடாது என்ற போதிலும் வார்த்தைகள் அனைத்தும் நச்சு பூசப்பட்ட அம்பு எய்ததை போன்றது.
ஸ்டாலின் பேச்சை கேட்கும் கிளிப்பிள்ளை போல திமுகவினர் பேசிவருவதால் பாரதியின் பேச்சு ஸ்டாலினின் கருத்தாக தான் இருக்க முடியும்.

நிரூபணம்
ஹெச்.ராஜாவை பொறுக்கி என பாரதி கூறியதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை , தெரிந்தே அவரை அப்படி பேசியதை கண்டிக்கிறோம். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தகுதிக்கான அருகதையற்றவர் என்பதற்கு நிரூபணமாகியுள்ளது அவரது பேச்சுக்கள்.

முட்டாள்கள்
வடமாநிலத்தவர்களை முட்டாள்கள் என்று கூறுவது வேதனை அளிக்கிறது. பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை நீதிபதிகளாக தேர்வானது நாங்கள் போட்ட பிச்சை என்று கூறியதை மானமுள்ள யாரும் ஏற்கமாட்டார்கள். திமுக , திக இல்லையென்றால் இலைகளை உடுத்தி ஆதிவாசிகள் போல இருப்போம் என்பது போல கூறியுள்ளார்.

கோயிலுக்கு
திமுகவினர் இப்படிதான் சலுகைகளை செய்துவிட்டு பிச்சை போட்டதாக கூறுவார்கள். அமைதியாக உள்ள இஸ்லாமியர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைக்கிறது. இந்து மக்களை ஏமாற்றுவதற்காக திமுகவினர் கயிறைகட்டிகொண்டு திரிகின்றனர். திமுகவை சேர்ந்தவர்கள் யார் கோவிலுக்கு போனாலும் ஆயிரக்கணக்கில் அய்யருக்கு வழங்குவோம் என கூறியுள்ளார்.

மாலை
ஊடகத்தினரை இழிவாக பேசியதற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஆர்.எஸ்.பாரதியின் ஊடகம் தொடர்பான பேச்சுக்கு கலைஞர் டிவியில் விவாதம் நடத்துவார்களா. ஆர்.எஸ்.பாரதியின் ஊடகம் குறித்த பேச்சு தயாநிதிமாறனை குறிப்பிடுவது போல உள்ளது. பதவியை தக்கவைப்பதற்காக பாரதி மன்னிப்பு கேட்டுள்ளார். பத்திரிக்கையாளர்களுக்கு விபச்சார மாலை போட்டுள்ளார் ஆர்.எஸ்.பாரதி என்றார் ராதாகிருஷ்ணன்.
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications