மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக அரசுக்கு எதிராக 2 மாதம் உண்ணாவிரதம்.. தினகரன் ஆதரவாளர்கள் அதிரடி!

தமிழக அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் உண்ணாவிரதம் இருக்க போவதாக முடிவெடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரனின் கடைசி அஸ்திரம் ஸ்லீப்பர் செல் பயன்படுவார்களா?- வீடியோ

    மதுரை: தமிழக அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் உண்ணாவிரதம் இருக்க போவதாக முடிவெடுத்துள்ளனர்.

    நேற்று 18 எம்எல்ஏக்கள் நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வந்தது. அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    Post 18 MLA disqualification: TTV Dinakaran holds a meeting with supporters in Madurai

    இதனால் தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் அதிகாரப்பூர்வமாக தங்கள் எம்எல்ஏ பதவியை இழந்து இருக்கிறார்கள். இதனால் தினகரன் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று குற்றாலத்தில் தங்கி இருந்த ஆதரவாளர்கள் எல்லோரும் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு வந்தனர். டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்கள் 18 பேருடனும் மதுரையில் ஆலோசனை நடத்தினார். மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த ஆலோசனை நடந்தது.

    ஆலோசனையின் முடிவில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்து இருக்கிறார்கள். தகுதி நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் செல்ல முடிவு எடுத்து உள்ளனர்.

    அதேசமயம் வழக்கு நடக்கும் போதே தேர்தல் வந்தால் அதிலும் போட்டியிட போவதாக கூறியுள்ளனர். மேலும் 18 பேரும் அமமுக சார்பில் போட்டியிட்டு முடிவு செய்துள்ளார்.

    அதுமட்டுமில்லாமல் அதிமுக அரசை கண்டித்து இவர்கள் 18 பேரும் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். நவம்பர் 10ம் தேதியிலிருந்து 2 மாதங்களுக்கு உண்ணாவிரதம் இருக்க இருக்கிறார்கள். மொத்தம் 22 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் உண்ணா விரதம் இருக்க உள்ளனர்.

    தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். மேலும் டிடிவி தினகரனும் இதில் கலந்து கொள்வார். ஆர்கே நகர் தொகுதியிலும் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    Post 18 MLA disqualification: TTV Dinakaran holds a meeting with supporters in Madura.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X